கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறை அதிக வளர்ச்சி கண்டுள்ளதாக, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றிய மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறை அதிக வளர்ச்சி கண்டுள்ளதாக குறிப்பிட்டார். ரயில்வே துறையின் நிதி நிலைமை மேம்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வாக்கு வங்கி அரசியல் என்று இருந்த நிலையை, தற்போது செயல்திறன் அரசியலாக மாற்றப்பட்டுள்தாகவும், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
















