மேற்காசிய நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அன்னை தமிழ் மன்றத்தின் முயற்சியால் பஹ்ரைனிலிருந்து 192 தமிழர்கள் தாயகம் வந்தடைந்தனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக, பஹ்ரைனில் வசித்து வந்த தமிழர்கள் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கி தவித்தனர்.
இதையடுத்து அவர்கள் அன்னை தமிழ் மன்றத்தை அணுகி தாயகம் திரும்ப உதவி கோரினர். அதன்பேரில் Gulf Air விமான சேவை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, பஹ்ரைனில் இருந்து சவுதி அரேபியா வழியாக சென்னை திரும்ப சிறப்பு விமான சேவை ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த விமானத்தில் 192 தமிழர்கள் பயணித்து சென்னை வந்தடைந்தனர். சில தொழிலாளர்களுக்கு அன்னை தமிழ் மன்றம் சார்பில் இலவச பயண சீட்டும் வழங்கப்பட்டது. பஹ்ரைனில் இருந்து தமிழர்களை மீட்ட அன்னை தமிழ் மன்றத்தின் முயற்சியை பலரும் பாராட்டியுள்ளனர்.
















