இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்த அரசாங்கத் தலைவர் என்ற பெருமையை பெறும் பிரதமர் மோடிக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 8,931 நாட்கள் அரசாங்கத்தின் தலைவராக பதவி வகித்து பிரதமர் மோடி சாதனை படைத்துள்ளார் என கூறியுள்ளார்.
8,930 நாட்கள் அரசு பதவி வகித்த முன்னாள் சிக்கிம் முதல்வர் பவன் சாம்லிங் அவ்லின் சாதனை முறியடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2014, 2019, 2024 மக்களவை தேர்தலில் தொடர்ந்து 3 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பிரதமர் மோடி என்றும், 12 ஆண்டுகளுக்கும் மேலாக முதலமைச்சராக பதவி வகித்தவர் எனறும் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்,
















