அணுசக்தி திட்டங்களை கைவிட ஈரான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஈரானை வழிநடத்திய முக்கிய தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.
அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலால் நிலைகுலைந்துள்ள ஈரான், அமைதி ஒப்பந்ததை ஏற்படுத்திக் கொள்ளவே விரும்புவதாக ட்ரம்ப் தெரிவித்தார்.
எனினும், ஈரான் மீது தான் எந்த நம்பிக்கையும் கொண்டிருக்கவில்லை என்றும் ட்ரம்ப் விளக்கமளித்தார். ஈரானுக்கு எதிரான போரில் வெற்றி கிடைத்துவிட்டதாகவும் ட்ரம்ப் கூறினார்.
















