வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்கியது மிகப்பெரிய அரசியல் என எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் உள்ள எழுத்தாளர்களில் பெரும்பாலானோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எழுத்தாளர் ஜெயமோகனும் வைரமுத்துவுக்கு ஞானபீடம் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு வாழும் தமிழ் அறக்கட்டளை சார்பில் ‘உலக இலக்கியத்திற்கான வாழும் தமிழ் விருது’ என்ற விருதை புதிதாக நிறுவுவதாகவும் இந்த விருதை உலக மற்றும் தேசிய அளவிலான எழுத்தாளர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெயமோகன்,
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது அத்தனை தமிழ் எழுத்தாளர்களுக்கும் ஏற்பட்ட அவமானம் எனவும் வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்கியது மிகப்பெரிய அரசியல் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயமோகன், வைரமுத்துவுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டதில் மோசடி நடந்துள்ளதாகக் கூறினார்.
















