சென்னை துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட சாலை பணிகள் - கூவம் ஆற்றில் கட்டுமான கழிவுகளை கொட்ட தடை!
Sep 28, 2026, 03:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை துறைமுகம் – மதுரவாயல் உயர்மட்ட சாலை பணிகள் – கூவம் ஆற்றில் கட்டுமான கழிவுகளை கொட்ட தடை!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 26, 2026, 07:15 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கூவம் ஆற்றின் குறுக்கே மேற்கொள்ளப்பட்டு வரும் சென்னை துறைமுகம் – மதுரவாயல் உயர்மட்ட சாலைத் திட்டத்தின் போது, ஆற்றில் கட்டுமானக் கழிவுகளை கொட்டுவதற்கு தடை விதித்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கோயம்பேடு பகுதியில் கூவம் ஆற்றுக்குள் மண் கொட்டப்பட்டு நிலம் சமப்படுத்தப்படுவதால், ஆற்றின் ஓட்டம் பாதிக்கப்படுவதாக 2024-ஆம் ஆண்டு வெளியான செய்தியின் அடிப்படையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை பதிவு செய்தது.

இது குறித்த விசாரணையில், கூவம் ஆற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த 238 தற்காலிக கட்டுமான மேடைகள் அகற்றப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, கூவம் ஆற்றங்கரையில் சுமார் 1 லட்சம் மெட்ரிக் டன் கட்டுமான கழிவுகளும், 39 ஆயிரம் மெட்ரிக் டன் இதர கழிவுகளும் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த சென்னை மாநகராட்சி, கூவம் ஆற்றங்கரையில் இருந்த 14 ஆயிரத்து 257 ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு 13 ஆயிரத்து 484 குடும்பங்கள் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளித்தது.

தொடர்ந்து, கூவம் ஆற்றைப் பழைய நிலைக்கு கொண்டு வர தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடமிருந்து 50 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளதாகவும் மத்திய நீர்வளத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதங்களை பதிவு செய்து கொண்ட தீர்ப்பாயம், எந்த வித கட்டுமான கழிவுகளையும் கூவம் ஆற்றில் கொட்டக் கூடாது எனவும், பணிகளுக்காக அமைக்கப்பட்ட தற்காலிக கட்டமைப்புகள் மற்றும் இயந்திரங்களை, வேலை முடிந்தவுடன் கூவம் ஆற்றுப்பகுதிகளில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.

ஆற்றுப் பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அல்லது கழிவுகள் கொட்டப்படுகிறதா என்பதை நீர்வளத் துறை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் எனவும்,

பருவமழைக் காலங்களில் கூவம் ஆற்றின் நீரோட்டம் எக்காரணம் கொண்டும் தடைபடாமல் இருப்பதற்காக நடவடிக்கைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

Tags: National Green Tribunaldumping of construction debris into the Cooum RiverChennai Port–Maduravoyal Elevated Expressway project.
Share
Tweet
SendShare
Previous Post

திமுகவின் நான்கு அதிகார மையங்களை வீழ்த்த வேண்டும் – இபிஎஸ் அழைப்பு!

Next Post

திமுக எம்.பி.,க்கள் அவையில் இருப்பதில்லை – நிர்மலா சீதாராமன்

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies