பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் வாழும் பஷ்டூன் இன மக்கள், தங்களது பாரம்பரிய விளையாட்டுகளுடன் ஈத் பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.
பாகிஸ்தானின் பஷ்டூன் சமூகத்தினரின் கலாச்சார அடையாளத்தைப் பிரதிபலிக்கும் விளையாட்டு விழா நடைபெற்றது.
இதில் கோழி பிடித்தல், கயிறு இழுத்தல் மற்றும் மலைப்பாங்கான இடங்களில் நடைபெறும் ஓட்டப்பந்தயம் ஆகியவை முக்கிய ஈர்ப்புகளாக உள்ளன.
பஷ்டூன் மக்களின் வலிமை மற்றும் ஒற்றுமையைப் பறைசாற்றும் விதமாக இந்த விளையாட்டுகள் அமைகின்றன.
பலுசிஸ்தான் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதில் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
இதனை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
நவீன கால மாற்றங்களுக்கு இடையிலும், தங்களது முன்னோர்களின் வீர விளையாட்டுகளை மீட்டெடுக்கும் விதமாக இந்த விழாக்கள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.
இயற்கை எழில் சூழ்ந்த பலூசிஸ்தான் மலைப்பகுதிகளில் நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டிகள், அப்பகுதியின் சுற்றுலா மற்றும் கலாச்சார அடையாளத்தின் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
















