ஆந்திர மாநிலம் மார்க்காபுரம் மாவட்டத்தில் டிப்பர் லாரியுடன் தனியார் பேருந்து மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஹைதராபாத்தில் இருந்து பாமூர் நோக்கி சென்ற தனியார் பயணிகள் சொகுசு பேருந்து ஒன்று மார்காபுரம் மாவட்டம் ராயவரம் கல்குவாரிகள் அருகே அதிகாலை டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பேருந்து தீப்பிடித்து எரிவதை அறிந்த பயணிகள் சிலர் பேருந்து கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு வெளியே குதித்து உயிர்தப்பினர்.
எனினும் சம்பவ இடத்திலேயே 10 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தீக்காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 5 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















