கோவில்பட்டியில் இலவசமாக சிகரெட் தர மறுத்த கடைக்காரர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
பசுவந்தனை சாலையில் ஜோதி என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இங்கு மதுபோதையில் வந்த நபர் ஒருவர் இலவசமாக சிகரெட் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அந்த நபர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கடைக்காரர் மீது சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடினார்.
ஜோதி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
















