ஈரானின் புஷெர் அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அருகே நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அண்டை நாடான குவைத் தனது நாட்டு மக்களுக்குக் கதிர்வீச்சு தொடர்பான அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது.ஈரானின் புஷெர் அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அருகே நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அண்டை நாடான குவைத் தனது நாட்டு மக்களுக்குக் கதிர்வீச்சு தொடர்பான அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள புஷெர் அணுமின் நிலையத்தை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேல், அமெரிக்கா கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றன.
இந்தத் தாக்குதல்களால் அணுமின் நிலையத்தில் சேதம் ஏற்பட்டு, கதிர்வீச்சு கசியக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதனால் குவைத் நாட்டு அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். குவைத் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகம், காற்றின் தரம் மற்றும் கதிர்வீச்சு அளவைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை இறுக்கமாக மூடிவிட்டு, வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு குவைத் அரசு அறிவுறுத்தியுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழலில், அணுசக்தி மையங்களுக்கு அருகே நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் பெரும் அணுப்பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என சர்வதேச நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
















