தவெக மகளிர் அணியினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது தவெக தலைவர் விஜய் புகார் அளித்துள்ளார்.
அரசியல் விமர்சகரும், திமுக ஆதரவாளருமான பொன்ராஜ் தவெக மகளிர் அணியினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் மீது புகாரளிக்க சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு தவெக தலைவர் விஜய் நேரில் வருகை தந்தார். தொடர்ந்து டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்த அவர், பொன்ராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
















