அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் முரசொலி அறக்கட்டளை சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டது குறித்து விசாரிக்கக்கோரிய மனு மீது சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் முரசொலி அறக்கட்டளை சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும் திருநெல்வேலியை சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் சார்பில் முரசொலி அறக்கட்டளையால் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் விளம்பரம் என்ற பெயரில் முறைகேடாக செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
குறுக்கிட்ட நீதிபதிகள், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளதாக கூறப்படும் புகார் தொடர்பாக நீதிமன்றம் எதுவும் கூறவில்லை எனவும்,
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதனையடுத்து, மனு குறித்து சிபிஐ, தேசிய தாழ்த்தப்பட்ட்டோர் ஆணையம் மற்றும் முரசொலி அறக்கட்டளை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
















