சாலை விபத்தில் படுகாயமடைந்த நபருக்கு, தேனி திமுக எம்பி தங்க தமிழ்செல்வன், அவரது மகள் ஆகியோர் 2 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமென, சென்னை மோட்டார் வாகன தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கொளத்தூரில் 2021ம் ஆண்டு, தங்க தமிழ்செல்வனின் மகள் சாந்தி ஓட்டி வந்த கார் மோதி ஜெயக்குமார் என்பவர் படுகாயமடைந்தார்.
இதனால் இழப்பீடு கோரி பாதிக்கப்பட்ட நபர், மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி, விபத்தை ஏற்படுத்திய நபர்கள், பாதிக்கப்பட்டவருக்கு 7 புள்ளி 5 சதவீத வட்டியுடன் இழப்பீடு வழங்க வேண்டுமென ஆணையிட்டார்.
















