எழும்பூர் தனி தொகுதியில்,மதம் மாறிய தமிழன் பிரசன்னா போட்டியிட உள்ளதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
தனி தொகுதியான எழும்பூரில் திமுக சார்பில் தமிழன் பிரசன்னா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அர்ஜூன் சம்பத், கிருஸ்தவ மதத்திற்கு மாறியவர் எப்படி தனி தொகுதியில் போட்டியிட முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
பட்டியல் சமூகத்தினர் எத்தனையோ பேர் வாய்ப்பு கிடைக்காமல் உள்ள நிலையில், மதம் மாறிய ஒருவருக்கு தனி தொகுதியில் எப்படி திமுக சீட்டு கொடுத்தது எனவும் அவர் வினவியுள்ளார்.
இந்து, பவுத்தம், சீக்கிய மதங்களை சேர்ந்த பட்டியலின மக்கள், வேறு மதங்களுக்கு மாறினால் பட்டியலின சலுகைகளை அனுபவிக்க முடியாது என சட்டம் உள்ளது.
இதனை பல்வேறு உயர்நீதிமன்றங்களும், அண்மையில் உச்சநீதிமன்றமும் உறுதிபடுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,
















