நிழலுலக தாதாவான தாவூத் இப்ராஹிமை புகழ்ந்து ஸ்டிக்கர் ஒட்டியிருந்த தமிழக பதிவெண் கொண்ட பேருந்தை கர்நாடக போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவையில் இருந்து கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டம் நோக்கி சுற்றுலா பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அதில், பொறியியல் மாணவர்கள் 48 பேர் பயணம் மேற்கொண்டிருந்தனர். அந்த பேருந்தில், தாவூத் இப்ராஹிமை புகழ்ந்து பல வாசகங்கள் ஒட்டப்பட்டிருந்தன.
“தாவூத் இப்ராஹிம்தான் உண்மையான தாதா”, “கேங்ஸ் ஆஃப் மும்பை”, “உண்மையான கிரிமினல் டான்” போன்ற வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. இதனையடுத்து, பேருந்தை பறிமுதல் செய்த கர்நாடக போலீசார்,
அதில் இருந்த மாணவர்களை வேறு வாகனம் மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், கோவையில் உள்ள பேருந்தின் உரிமையாளரை அவர்கள் விசாரணை அழைத்துள்ளனர்.
















