சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
காரைக்குடியில் பரப்புரை மேற்கொண்ட அவர், புதுவயல் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
கண்டனூர் சோதனைச் சாவடியில் பணியில் இருந்த தேர்தல் பறக்கும் படையினர், சீமானின் வாகனத்தைச் சோதனைக்காக நிறுத்தினர்.
அப்போது காரில் இருந்து இறங்கிய சீமான், அங்கிருந்த பெண் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
















