ஈரானின் உள்கட்டமைப்பில் மிக முக்கிய அங்கமான மிகப்பெரிய தொங்கு பாலத்தை அமெரிக்கப் படைகள் தகர்த்துள்ளன.
தெஹ்ரான் மற்றும் கராஜ் நகரங்களை இணைக்கும் வகையில், சுமார் 400 மில்லியன் டாலர் செலவில் புதிதாகக் கட்டப்பட்ட 136 மீட்டர் உயரமுள்ள தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மீது அமெரிக்க ராணுவம் அதிநவீன ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது.
இந்தப் பாலத்தின் மையப்பகுதி இரண்டு முறை தாக்கப்பட்டதில், பாலம் நடுவே பிளந்து கீழே விழுந்து நொறுங்கியது. இந்தச் சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 95 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த டொனால்ட் ட்ரம்ப்,உடன்பாட்டிற்கு வராவிட்டால், இன்னும் பல அழிவுகள் தொடரும் என்றும் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
















