சட்டமன்ற தேர்தலில், தமிழகம் முழுவதும் உள்ள என்டிஏ வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் செய்வதே தனது பணி என பாஜக தேசிய பொதுக்குழு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கேரள கண்ணூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7-ஆம் தேதி வரை புதுச்சேரி மற்றும் கேரளாவில் பிரச்சாரம் செய்யும் பொறுப்பை கட்சி வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
7-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பாஜக மற்றும் என்டிஏ (NDA) வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார். இதுவே கட்சி தனக்கு வழங்கியுள்ள பொறுப்பு என்றும், அந்தப் பொறுப்பை தான் நிறைவேற்றுவேன் என்றும் அவர் கூறினார்.
















