மொடக்குறிச்சியில் பாஜக வேட்பாளர் கிருத்திகா சிவ்குமார் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் கிருத்திகா சிவ்குமார், இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இன்று காலை மொடக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு என்டிஏ கூட்டணி கட்சியினர் புடை சூழ சென்ற கிருத்திகா சிவ்குமார், தேர்தல் நடத்தும் அலுவலரும் தியாகராஜனிடம் தனது மனுவைச் சமர்ப்பித்தார்.
















