ஈரான் போருக்கு இடையே சிக்கி தவித்த மீனவர்களை மீட்டதைக்கூட எதிர்கட்சிகள் கொச்சைப்படுத்தி அரசியலாக்குவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வேதனை தெரிவித்துள்ளார்.
ஈரானில் 25 நாட்களுக்கும் மேலாக சிக்கித் தவித்த மீனவர்களை மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு திரும்ப தாயகம் அழைத்து வந்திருப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
ஒவ்வொரு மீனவரை மீட்பதற்கும் தமிழக பாஜக மூலம் 93 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
















