புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரம் மாலை ஆறு மணியுடன் நிறைவடைந்தது.
புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வியாழக்கிழமை ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தேர்தலுக்கான பிரசாரம் மாலை ஆறு மணியுடன் நிறைவடைந்தது. வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெறுகிறது.
இதேபோல் 140 தொகுதிகளை கொண்ட கேரளம் மற்றும் 126 தொகுதிகளை கொண்ட அசாமிலும் பிரசாரம் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து வாக்குச்சாவடியை தயார் படுத்தும் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
















