இந்தியா மீது கை வைக்க முயன்றால் பாகிஸ்தான் பல துண்டுகளாக சிதறும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் இந்தியா தாக்குதல் நடத்தினால் கொல்கத்தா வரை தாக்குதல் நடத்துவோம் என தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானின் பேச்சுகள் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் மேற்கு வங்கத்தின் மீது கை வைக்க முயன்றால், பாகிஸ்தான் எத்தனை துண்டுகளாக சிதறும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
















