தோல்வி பயம் காரணமாக, வாக்காளர்களுக்கு கடைகள் மூலம் திமுக-வினர் டோக்கன் விநியோகம் செய்வதாக பா.ம.க வேட்பாளர் திலகபாமா குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாமக வேட்பாளர் திலகபாமா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திலகபாமாவுக்கு, பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் மேளதாளம் முழங்க வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்த திலகபாமா, அப்பகுதியில் உள்ள கடைகளில் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். அப்போது தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், திமுக தோல்வி பயத்தால், வாக்காளர்களுக்கு கடைகள் மூலம் டோக்கன் விநியோகம் செய்வதாக குற்றம்சாட்டினார்.
















