நடிகரும் தவெக தலைவருமான விஜயின் கடைசி படமாக “ஜனநாயகன்” முழு திரைப்படமும் இணையதளத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த ஜனவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட படம் சென்சார் பிரச்சினையினால் தள்ளிப் போனது.
நேற்று மாலை படத்தின் ஒரு சில காட்சிகள் இணையதளத்தில் வெளியான நிலையில் நேற்று இரவு முழு படமும் உயர் தரத்தில் (HD) வெளியாகி உள்ளது.
இப்படத்தை லட்சக்கணக்கானோர் டவுன்லோடு செய்து தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். மேலும் தெலுங்கில் வெளியான நடிகர் பாலையாவின் பகவந்த் கேசரி படத்தை ஒத்திருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்சார் பிரச்னை உள்ள நிலையில் படம் இணையத்தில் வெளியானது கடும் அதிர்வ்லைகளை ஏற்படுத்தியுள்ளது.
















