மம்தா வியூகம் தகர்ப்பு : மேற்கு வங்க தேர்தலை கலக்கும் மீன் அரசியல் - சிறப்பு கட்டுரை!
Sep 1, 2026, 03:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மம்தா வியூகம் தகர்ப்பு : மேற்கு வங்க தேர்தலை கலக்கும் மீன் அரசியல் – சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 11, 2026, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மம்தாவின் 15 ஆண்டுகால ஆட்சியில் மீன் உற்பத்தியில் அம்மாநிலம் தன்னிறைவு அடையவில்லை என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ள நிலையில், மேற்குவங்க தேர்தல் பிரச்சாரத்தில் மீன் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

வரும் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் மேற்குவங்கத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாக முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜி மீண்டும் நான்காவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.

பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக,இத்தேர்தலில் வெற்றிபெற்று முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் நம்பிக்கையுடன் களத்தில் தீவிரமாக செயல்பட்டுவருகிறது.

கடந்த வாரம் ஹால்தியாவில் நடந்த பிரமாண்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, பாஜக ஆளும் மற்ற மாநிலங்களில் ஏற்பட்டுள்ள ‘வளர்ச்சி’ போலவே பாஜக ஆட்சியமைந்தால் மேற்கு வங்கமும் அதே வளர்ச்சியை அடையும் என்று உறுதியளித்தார்.

மாநிலத்தில் அதிக தேவை இருந்தபோதிலும், மீன் உற்பத்தியில் “தன்னிறைவு” அடையாத மேற்கு வங்கம், மற்ற மாநிலங்களிலிருந்து மீன் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது என்றும் இதற்கு மம்தாவின் நிர்வாகத் திறனற்ற ஆட்சியே காரணம் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

கடந்த பதினொரு ஆண்டுகளில், இந்தியாவின் ஒட்டுமொத்த மீன் உற்பத்தி, கடல் உணவு ஏற்றுமதி இரட்டிப்பாகியுள்ளது.

மீன் போன்ற ஒரு அடிப்படைத் தேவையைக் கூட பதினைந்து ஆண்டு கால ஆட்சியில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் அரசால் வழங்க முடியவில்லை என்றும், அசாம், ஆந்திரா மற்றும் பீகாரில் இருந்து மேற்கு வங்கம் மீன் இறக்குமதி செய்து வருவதாக கூறினார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக தனது தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மம்தா பானர்ஜி, முன்பு ஆந்திராவில் இருந்து மீன்களை இறக்குமதி செய்து வந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் இப்போது இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டதாக கூறியுள்ளார்.

ஆனால் 2022-23 நிதியாண்டில், மேற்கு வங்கம் பிற மாநிலங்களிலிருந்து 1.51 லட்சம் மெட்ரிக் டன், 2023-24-ல் 1.36 லட்சம் மெட்ரிக் டன், 2024-25-ல் 1.22 லட்சம் மெட்ரிக் டன் மீன்களை மேற்கு வங்கம் இறக்குமதி செய்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.

இந்தச் சூழலில் பாஜக ஆட்சிக்கு வந்தால் , மக்​களின் உணவு உரிமையை பறித்து விடுவார்கள் என்றும், குறிப்பாக மேற்கு வங்க மக்களுக்குப் மிக​வும் பிடித்​த​மான மீன் மற்​றும் இறைச்சி உண்​ணுவதைத் தடை செய்து விடு​வார்​கள் என்றும் மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்து வருகிறார்.

மேற்கு வங்க மக்கள் மீனை வெறும் உணவாக மட்டுமில்லாமல் தங்கள் பாரம்பரியத்துக்கும் பெருமைக்கும் அடையாளமாக வைத்துள்ளனர்.

எனவே மீனைப் பற்றி பேசி பிரதமர் மோடி மேற்கு வங்க மக்களின் உணர்வோடு பாஜகவை கொண்டு சேர்த்துள்ளார்.

பிரதமரின் வழியாக மீன் உணவைப் புகழ்ந்​தும், மேற்கு வங்க மக்களின் பாரம்பரியத்தைப் போற்​றி​யும் பாஜக பிரச்​சா​ரம் செய்​து வருகிறது.

தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக வேட்​பாளர்​கள் மீன் சந்தைகளுக்​குச் செல்​வதும், மீன் வாங்​கு​வதும், அதைப் பொது​ வெளி​யில் உண்​ப​தை​யும் வழக்​க​மாக்கி கொண்​டுள்​ளனர்.

ராஜர்​ஹாட்​-கோ​பால்​பூர் தொகுதி பாஜக வேட்​பாளர் தருண்​ஜோதி திவாரி, மீன் சந்​தைக்​குச் சென்று பிரச்​சா​ரம் செய்​ததுடன், அங்கே மீன் சாதம் சாப்​பிட்​டுக் கொண்டே பேட்​டியளித்​துள்ளார். மாநில பாஜக​வின் மூத்த தலை​வரும், கரக்​பூர் நகர தொகுதி வேட்பாள​ரு​மான திலீப் கோஷ், மீன் சந்​தை​யில் விற்​பனை​யாளர்​களு​டன் கலந்​துரை​யாடி பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார்.

இதனால் பாஜகவுக்கு எதிரான மம்தா பானர்ஜியின் தேர்​தல் வியூ​கம் மக்களிடம் எடுபடவில்லை என்று கூறப்படுகிறது.

Tags: fish productionPM Modimodi campaginwest bengal assembly electionwest bengal assembly election tmcwest bengal assembly election 2026west bengal assembly election 2026 west bengalassembly elections west bengal
Share
Tweet
SendShare
Previous Post

தண்ணீர் கேட்ட மக்களை தரக்குறைவாக பேசிய திமுக எம்எல்ஏ கதிரவன் – அண்ணாமலை கண்டனம்!

Next Post

பெண்களுக்கு மாதம் ரூ.3000 : மேற்குவங்கத்தை புரட்டிப்போட்ட பாஜக தேர்தல் அறிக்கை – சிறப்பு தொகுப்பு!

Related News

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை வழக்கு – தம்பதியிடம் போலீஸ் தீவிர விசாரணை!

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

FQL செயலியில் பணம் செலுத்தி ஏமாந்தோம்; 100க்கும் மேற்பட்டோர் புகார்

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies