வாக்காளர்களுக்கு தேர்தலுக்கு முன்பே திமுகவினர் எட்டாயிரம் ரூபாய் கூப்பன் வழங்குவது மக்களை ஏமாற்றும் முயற்சி என்றும், இதில் தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட டாக்டர் நடேசன் சாலையில், பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்தபடி பிரசாரம் செய்த தமிழிசைக்கு, பெண்கள் ஆர்த்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
பாஜக தொண்டர்கள் சால்வை போர்த்தியும், மலர் தூவியும் வரவேற்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள தண்ணீர் அடிக்கும் பம்பில், தண்ணீரை இறைத்து தமிழிசை வாக்கு சேகரித்தார்.
பின்னர், நமது தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தமிழிசை சௌந்தரராஜன்,
திமுகவினர் எட்டாயிரம் ரூபாய் கூப்பன் கொடுப்பதை கடுமையாக விமர்சித்தார்.தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
















