உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின் - உலகம் முழுவதும் கொண்டாடி தீர்த்த கால்பந்து ரசிகர்கள்!
Sep 4, 2026, 11:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின் – உலகம் முழுவதும் கொண்டாடி தீர்த்த கால்பந்து ரசிகர்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 20, 2026, 09:20 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்ற நிலையில் உலகம் முழுவதும் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற ஸ்பெயின் அணியின் கேப்டன் ரோட்ரி கோல்டன் பால்-யிடம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கோப்பையை வழங்கி கௌரவித்தார்.

கோப்பையை பெற்றுக்கொண்ட வீரர்கள் உற்சாக வெள்ளத்தில் திளைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்..

உலகம் முழுவதும் ரசிகர்கள் ஸ்பெயின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இங்கிலாந்தின் லண்டன் நகரில் ஸ்பெயின் தேசிய கால்பந்து அணியின் ஆதரவாளர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்பெயின் தேசியக் கொடிகளை ஏந்திய ரசிகர்கள் முழக்கங்களை எழுப்பியும், பாடல்கள் பாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து, அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் ஸ்பெயின் தேசிய கால்பந்து அணியின் ஆதரவாளர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வெற்றியைக் கொண்டாடிய ரசிகர்கள், ஸ்பெயின் தேசியக் கொடிகளை ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

உலக நாடுகள் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் ஃபிஃபா வெற்றியை ரசிகர்கள் கொண்டாடினர். அந்த வகையில், டெல்லியில் 2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் நேரடி ஒளிபரப்பு நிகழ்வு நடத்தப்பட்டது.
இதில் ஏராளமான கால்பந்து ரசிகர்கள் பங்கேற்று போட்டியை உற்சாகமாகக் கண்டு ரசித்தனர். மேலும், உலகக் கோப்பை இறுதிப் போட்டியை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வு ரசிகர்களிடையே கால்பந்து மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.

மேற்கு வங்கத்தின் கொல்கத்தா நகரில் ஸ்பெயின் தேசிய கால்பந்து அணியின் ஆதரவாளர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்பெயின் தேசியக் கொடிகளை ஏந்திய ரசிகர்கள், பட்டாசுகள் வெடித்தும் முழக்கங்களை எழுப்பியும் வெற்றியை கொண்டாடினர். மேலும், உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் அணிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதே போல், மகாராஷ்டிராவின் மும்பை நகரில் ஸ்பெயின் தேசிய கால்பந்து அணியின் ஆதரவாளர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.

அசாம் மாநிலம் குவஹாட்டியில் ஸ்பெயின் அணியின் வெற்றியை சிறுவர்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் ஆட்டம், பாட்டத்துடன் நடனமாடி கொண்டாடினர்.

இதேபோல் கர்நாடகாவின் பெங்களூருவில் ஸ்பெயின் நாட்டு தேசியக் கொடியை ஏந்திய ரசிகர்கள் முழக்கங்களை எழுப்பி உற்சாக வெள்ளத்தில் திளைத்தனர்.

Tags: fifa world cup 2026 previewsfifa world cup 2026 stadiumsfifa world cup finalspain won celebrationfootball world cup 2026fifa world cup 2026fifa world cup 2026 songfifa world cup 2026 livefifa world cup 2026 matches
Share
Tweet
SendShare
Previous Post

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் – சேரன் அணி வெற்றி!

Next Post

பழனி முருகன் கோயில் நிலப்பதிவு விவகாரம் – அசல் கிரையப் பத்திர ஆவணங்கள் வெளியீடு!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies