பழனி முருகன் கோயில் நிலப்பதிவு விவகாரம் - அசல் கிரையப் பத்திர ஆவணங்கள் வெளியீடு!
Sep 4, 2026, 11:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழனி முருகன் கோயில் நிலப்பதிவு விவகாரம் – அசல் கிரையப் பத்திர ஆவணங்கள் வெளியீடு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 20, 2026, 10:55 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில், அசல் கிரையப் பத்திர ஆவணங்கள் வெளியானதால் விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் அசல் கிரையப் பத்திர ஆவணங்கள் கிடைத்துள்ளன.

அதில், 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதி பழனி கோயில் நிலப் பரிமாற்றம் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழனி மலை அடிவாரத்தில் உள்ள தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளையின் அறங்காவலர் என்ற பெயரில் எம்.டி. முருகதாஸ் என்பவர் விற்பனையாளராக இருந்து நிலத்தைக் கைமாற்றியுள்ளதாகவும், பழனி கோயில் நிலத்தை திருப்பூரைச் சேர்ந்த வெள்ளத்துரை மற்றும் பழனி டி.கே.என்.புதூரைச் சேர்ந்த சேதுபதி ஆகியோர் வாங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

பழனி சார்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட பழைய நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி, இந்தச் சொத்துப் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு, ஒட்டுமொத்த சொத்தின் விற்பனைத் தொகையாக 2 கோடி ரூபாய் என ஆவணத்தில் காண்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2 கோடி ரூபாயும் தலா 50 லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட 4 காசோலைகளாக கடந்த மார்ச் 27ஆம் தேதியே வழங்கப்பட்டதாக பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​தற்போது கிடைத்துள்ள கிரையப் பத்திரம் மற்றும் நீதிமன்ற உத்தரவு தொடர்பான விவரங்கள் பழனி கோயில் நில முறைகேடு வழக்கில் சிபிசிஐடி போலீசாரின் அடுத்தகட்ட விசாரணைக்கு முக்கிய ஆதாரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: palani subramanya templepalani temple visitpalani templepalani temple historypalani temple land issuepalani temple land case
Share
Tweet
SendShare
Previous Post

உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின் – உலகம் முழுவதும் கொண்டாடி தீர்த்த கால்பந்து ரசிகர்கள்!

Next Post

முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு – விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies