வருங்கால வைப்பு நிதி பணத்தை UPI மூலம் எடுக்கும் புதிய வசதி, வரும் டிசம்பர் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
PF பணத்தை UPI மூலம் எடுப்பதற்கான வசதிக்கான சோதனை நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புதிய நடைமுறை அமலுக்கு வந்தால், சந்தாதாரர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட PF தொகையில் 75 சதவீதம் வரை நேரடியாக வங்கிக் கணக்கிற்கு மாற்றிக்கொள்ள முடியும்.
அதேநேரம், PF கணக்கில் குறைந்தபட்சம் 25 சதவீத தொகையை இருப்பில் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்வி, திருமணம், வீடு கட்டுதல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக இந்த வசதியை பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது.
UPI மூலம் PF தொகையை பெறும் வசதி நடைமுறைக்கு வந்தால், சந்தாதாரர்களுக்கான பணம் பெறும் நடைமுறைகள் மேலும் எளிமையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















