தேர்தல் ஆணையத்தின் மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனக்கூறி, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் முன்னாள் நீதிபதிகள் 42 பேர் திறந்த கடிதம் வெளியிட்டுள்ளனர். இந்தக் கடிதத்தில், தேர்தல் ஆணையம், நீதித்துறை உள்ளிட்ட அரசியலமைப்பு அமைப்புகள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுவது குறித்து கவலை தெரிவித்துள்ளனர். வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம், தேர்தல் செயல்பாடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளையும் அவர்கள் விமர்சித்துள்ளனர். அரசியலமைப்பு அமைப்புகளை விமர்சிப்பது ஜனநாயக உரிமை என்றாலும், தனிநபர் தாக்குதல்கள் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தவிர்க்க வேண்டும் என முன்னாள் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
















