டெல்லியில் நடைபெறவுள்ள ராம்லீலா நிகழ்வில், ராவணன், கும்பகர்ணன்
உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்கப்பட உள்ளது.
நமது சமூகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தூய்மையின்மை, கழிவுகள் மற்றும் சுகாதார சீர்கேட்டை அடையாளப்படுத்தும் விதமாக இந்த கரப்பான் பூச்சி உருவம் உருவாக்கப்பட்டுள்ளதாக விழா அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தீமையை ஒழிப்பதே தசரா பண்டிகையின் முக்கிய நோக்கம் ஆகும். அந்த வகையில், நமது அன்றாட வாழ்வையும், ஆரோக்கியத்தையும் பாதிக்கும் அழுக்கை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
பாரம்பரியமான ராம்லீலா விழாவில், சுகாதார விழிப்புணர்வை மையமாக வைத்து 30 அடி உயர கரப்பான்பூச்சி உருவபொம்மை எரிக்கப்பட உள்ளது மக்களிடையே ஆச்சரியத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
















