சென்னை பல்லவன் சாலையில் உள்ள பாடிகார்ட் முனீஸ்வரர் கோவிலில், ஆயுத பூஜையை ஒட்டி ஏராளமான பொதுமக்கள் தங்களது வாகனங்களுடன் குவிந்தனர்.
ஆயுத பூஜையை ஒட்டி கார், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றுக்கு சந்தனம், குங்குமமிட்டும், மலர் மாலைகள் அணிவித்தும் பொதுமக்கள் ஏராளமானோர் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். மேலும், வாகனங்கள் பழுதின்றி இயங்கவும், பயணங்கள் பாதுகாப்பாக அமையவும், தொழிலில் முன்னேற்றம் ஏற்படவும் முனீஸ்வரரிடம் வேண்டிக்கொண்டனர். ஆயுத பூஜையை ஒட்டி கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.
















