பயணிகள் இயற்கை அழகை ரசிப்பதற்காக மதுரை – குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ‘விஸ்டாடோம்’ ஏசி பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை – குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில், வரும் 22-ம் தேதி முதல் ஜனவரி 15-ம் தேதி வரை வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த பெட்டிகள் இணைக்கப்படும். அதேபோல, குருவாயூர் – மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலில், அக்டோபர் 23-ம் தேதி முதல் ஜனவரி 16-ம் தேதி வரை வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை இந்த கண்ணாடி பெட்டிகள் இணைக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விஸ்டாடோம் ஏசி பெட்டியில், அகலமான கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் சாய்த்து அமரக்கூடிய சொகுசு இருக்கைகள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் செங்கோட்டை – புனலூர் மலைப்பாதையின் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளைப் பயணிகள் கண்டு ரசிக்கலாம்.
















