திடீர் இன்ஸ்டா பிரபலங்களை குறி வைக்கும் நிறுவனங்கள் : ஒரே வீடியோவால் பணமழையில் நனையும் வீரமணி - சிறப்பு தொகுப்பு!
Oct 21, 2026, 06:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திடீர் இன்ஸ்டா பிரபலங்களை குறி வைக்கும் நிறுவனங்கள் : ஒரே வீடியோவால் பணமழையில் நனையும் வீரமணி – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 21, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சமூக வலைத்தளங்களில் தன் முகவரியை பகிர்ந்து சிக்கலில் மாட்டிக் கொண்ட இன்ஸ்டா இன்புளூயன்சர், மதுரை வீரமணி தற்போது பல்வேறு நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிடராக மாறத் தொடங்கியிருக்கிறார். மதுரையிலிருந்து தன்னுடைய வீட்டியே காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்ட இன்ஸ்டா இன்புளுயன்ஸர் வீரமணிக்கு அடித்திருக்கும் ஜாக்பாட்டை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்

நடிகர் சரத்குமார் நடிப்பில் உருவான சூரிய வம்சம் படத்தில் வரும் நட்சத்திர ஜென்னலில் வானம் எட்டி பார்க்குது என்ற ஒரே பாடலில் முன்னேற வேண்டும் என்பது தான் பலரின் கனவாக இருக்கிறது. அந்த வகையில் இன்ஸ்டா பக்கத்தில் தன் முகவரியை பகிர்ந்து வெளியிட்ட ஒரே வீடியோ மதுரை வீரமணியின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் புகழின் உச்சத்திற்கே அழைத்துச் சென்றிருக்கிறது.

நண்பர்களே….. எனத் தொடங்கி மதுரைக்கே உண்டான வட்டாரப் பேச்சோடும், நகைச்சுவை உணர்வோடும் இன்ஸ்டாகிராமின் தற்போதைய டிரெண்டிங்கில் இருப்பவர் தான் இந்த மதுரை வீரமணி. மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்து கொண்டே இன்ஸ்டாகிராமில் FUN ஆக பேசி வீடியோ போடத்தொடங்கிய வீரமணி, தனக்கு கிடைத்த வரவேற்பால் வீடியோக்களை அதிகளவில் போட வேண்டும் என்பதற்காகவே ஜெராக்ஸ் கடை ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.

தன்னுடைய கடையில் இருந்தபடி வீடியோ வெளியிடுவதோடு, அதில் வரும் கமெண்ட்டுகளுக்கு பதிலையும் பதிவிட்டு வந்ததால் இன்ஸ்டாகிராம் உலகில் தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

விரைவில் வரவிருக்கும் தீபாவளி பண்டிகைக்காக ஸ்வீட் பாக்ஸ் அனுப்பி வைக்குமாறு தனது வீட்டு முகவரியை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட வீரமணிக்கு அப்போதே பிரச்னை வரத் தொடங்கியது. முதலில் ஸ்வீட் பாக்ஸ்களை அனுப்பி வைத்த நெட்டிசன்கள் அடுத்தடுத்து கேஷ் ஆன் டெலிவரி மூலம் விலை உயர்ந்த பொருட்களையும் அனுப்பி வைக்கத் தொடங்கினர்.

டிவி, வாஷிங் மெசினில் தொடங்கி பீரங்கி வரை என கோடிக்கணக்கான மதிப்பிலான பொருளை கேஷ் ஆன் டெலிவரி ஆப்சனை பயன்படுத்தி வீரமணியில் இல்லத்திற்கு ஆர்டர்கள் குவிந்தன. ஒரு கட்டத்தில் இதனை எதிர்கொள்ள முடியாத வீரமணி, தெரியாமல் தம்முடைய முகவரியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுவிட்டேன் என மன்னிப்பு கேட்டு கண்ணீர் விட்டு கதறும் சூழலுக்கே தள்ளப்பட்டார். இருப்பினும் ஆர்டர்களின் வருகை கதவை தட்டிக் கொண்டே இருக்க வீட்டையே காலி செய்யும் முடிவுக்கு வந்த மதுரை வீரமணிக்கு இன்ப அதிர்ச்சி ஒன்று வந்து சேர்ந்தது.

தன்னுடைய நகைச்சுவை மிகுந்த பேச்சுக்களால் உலகளவில் டிரெண்டான மதுரை வீரமணிக்கு இன்ஸ்டா மார்ட் சார்பில் கணினி, உள்ளிட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை விலையில்லாமல் வழங்கியதை வீரமணியே மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இன்ஸ்டா மார்ட்டை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் மதுரை வீரமணியை பயன்படுத்தி தன்னுடைய தங்களை பிரபலப்படுத்தக் கூடிய வேலையில் இறங்கியுள்ளன.

அண்மையில் கேரளத்தில் உள்ள வெளிநாட்டுக்கு மாணவர்களை கல்விக்காக அனுப்பி வைக்கும் தனியார் நிறுவனம் ஒன்று வீரமணிக்கு இலவசமாக விமான டிக்கெட் போட்டுக் கொடுத்து தங்களுடைய நிகழ்வில் பங்கேற்கச் செய்துள்ளது. விமான நிலையத்திலிருந்து புறப்படும் வரை அந்த நிகழ்வில் பங்கேற்ற வரை ஒவ்வொரு நிகழ்வுகளையும் வீடியோ மூலமாக பகிர்ந்து லைக்ஸ்களையும், வியூஸ்களையும் அள்ளிக் கொண்டிருக்கிறார் இன்ஸ்டா டிரெண்டிங் வீரமணி.

நகைச்சுவை மிகுந்த பேச்சை வெளிப்படுத்திய ஜிபிமுத்து, கூமாபட்டியின் இயற்கை அழகை வீடியோவாக பதிவு செய்த கூமாபட்டி தங்கபாண்டி ஆகியோரின் வரிசையில் மதுரை வீரமணியும் இணைந்துள்ளார்.

திடீரென வீடியோக்களின் மூலமாக பிரபலமாகும் இதுபோன்ற இன்ஸ்டா இன்புளுயன்ஸர்களை தங்களின் நிறுவன பிராண்ட் அம்பாசிடராக மாற்றுவதில் முன்னணி நிறுவனங்கள் போட்டி போடத்தொடங்கியுள்ளன.

தங்களுடைய நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்து விளம்பரம் எடுப்பதற்கு பதிலாக இதுபோன்ற திடீர் பிரபலமாகும் இன்ஸ்டா இன்புளுயன்சர்களை அழைத்து அதனை வீடியோவாக வெளியிட்டு பிரபலப்படுத்திக் கொள்வதைத் தான் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களின் உத்தியாகவே வைத்திருக்கின்றன.

தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட கூமாபட்டி தங்கபாண்டி தற்போது பிரபல தொலைக்காட்சிகளில் முன்னணி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். கூமாபட்டி தங்கபாண்டி வரிசையில் தனக்கு கிடைத்திருக்கும் இந்த வரவேற்பையும் புகழையும் பயன்படுத்தும் முறையில் தான் மதுரை வீரமணியின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது.

Tags: Madurai Veeramanisocial mediaInstagram influencerMadurai Veermani
Share
Tweet
SendShare
Previous Post

பாக். உயரதிகாரிகள் வெளிநாடுகளில் நிரந்தரமாக குடியேற திட்டம் – கவாஜா ஆசிப் குற்றச்சாட்டு!

Related News

பாக். உயரதிகாரிகள் வெளிநாடுகளில் நிரந்தரமாக குடியேற திட்டம் – கவாஜா ஆசிப் குற்றச்சாட்டு!

உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் அதிகாரிகளின் பதவிக்காலம் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு!

3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – காத்திருப்போர் பட்டியலில் ராதிகா ஐபிஎஸ்!

மைசூரு தசரா விழா குறித்த சிறந்த100 ரீல்ஸ்களுக்கு பரிசு – கர்நாடக அரசு அறிவிப்பு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை – சாலைகளில் மழை நீர் தேக்கம்!

இறுதிக்கட்டத்தில் இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – டிரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

திடீர் இன்ஸ்டா பிரபலங்களை குறி வைக்கும் நிறுவனங்கள் : ஒரே வீடியோவால் பணமழையில் நனையும் வீரமணி – சிறப்பு தொகுப்பு!

காவலர் வீர வணக்க நாள் – காவலர் நினைவு சின்னத்தில் முதல்வர் விஜய் மரியாதை!

சவாலான சூழல்களிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் காவலர்களுக்கு நன்றி – பிரதமர் மோடி

பொள்ளாச்சி – வால்பாறை மலைச்சாலையில் உருண்டு விழுந்த பாறை – போக்குவரத்து பாதிப்பு!

பருவமழையை எதிர்கொள்ள 220 சிறப்பு முகாம்கள் – சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்!

இன்றைய தங்கம் விலை!

சென்னையில் மழை பாதிப்பு பகுதிகளில் அமைச்சர்கள் ஆனந்த், அருண்ராஜ் ஆய்வு!

நாட்டின் கவுரவத்தை கெடுப்பவர்கள் நாட்டின் எதிரிகள் – பிரதமர் மோடி

தேசமே முதன்மை என்ற உணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும் : மோகன் பாகவத்

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா – சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies