பாகிஸ்தானில் அரசு உயர் அதிகாரிகள் பலர் வெளிநாடுகளில் நிரந்தரமாகக் குடியேறத் திட்டமிடுவதாக, அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் குற்றம்சாட்டியுள்ளார்.
கனடா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்ல அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறிய அவர், தற்போது போர்ச்சுகல் முக்கிய இலக்காக மாறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரசு பணியில் இருக்கும்போதே குடியேறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாகவும் கூறியுள்ளார்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களையோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயர்களையோ அவர் வெளியிடவில்லை.
















