தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே 28 மாவட்டங்களில் ஊராட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்டமாக மேலும் 9 மாவட்டங்களிலும் பதவிக்காலம் முடிவடைந்தது.
இதற்கிடையே, புதிய ஊராட்சிகளை மாநகராட்சிகளுடன் இணைத்தல் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மறுசீரமைப்புப் பணிகளை முடிப்பதற்கு அவகாசம் அளிக்கும் வகையில், உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் அதிகாரிகளின் பதவிக்காலத்தை 2027 ஏப்ரல் 19-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
















