ஜெம் வீரமணி வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஐபிஎஸ் அதிகாரி ராதிகாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருச்சி மாநகர காவல் ஆணையராக ரூபேஷ் குமார் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.
பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக இருந்த சந்தோஷ்குமார், குடிமைப்பொருள் வழங்கல் துறை சிஐடி ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய காமினி, டிஜிபி அலுவலகத்தின் நிர்வாக பிரிவு ஐ.ஜி-ஆக மாற்றப்பட்டுள்ளார்.
ஜெம் வீரமணி வழக்கில் குற்றச்சாட்டுக்குள்ளான ராதிகா ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். டிஜிபி அலுவலகத்தின் நிர்வாக பிரிவு ஐ.ஜி-ஆக பணியாற்ற வந்த நிலையில், ராதிகா மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
















