பாஜக VS NOTA : இந்துாரில் சுவாரஸ்ம்!
Sep 14, 2025, 08:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக VS NOTA : இந்துாரில் சுவாரஸ்ம்!

Web Desk by Web Desk
May 10, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் தற்போது நடந்து கொண்டிருக்கும் மக்களவை தேர்தலில், அனல் பறக்கும் பிரச்சாரங்களுக்கு நடுவிலும் சுவாரஸ்யமான செய்திகளும் வருகின்றன. அப்படி ஒரு சுவாரஸ்யமான செய்தி தான் இது. பாஜகவுக்கும் நோட்டாவுக்கும் இடையேயான போட்டியாக இந்தூர் தேர்தல் களம் மாறியிருக்கிறது. என்னதான் நடந்தது அந்த தொகுதியில் என்பது பற்றி பார்க்கலாம்.

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இதில், மத்திய பிரதேச மாநிலத்தில் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆம் தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில் , மொத்தமுள்ள 29 தொகுதிகளில், மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 13ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் மத்திய பிரதேசத்தின் வர்த்தக தலைநகர் என்று சொல்லப்படும் இந்தூர் தொகுதி மிக முக்கியமான தொகுதியாகும் . 8 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய இந்தூர் தொகுதி கடந்த 35 ஆண்டுகளாக பாஜக வசம் உள்ளது. மக்களவையின் சபாநாயகராக இருந்த பாஜகவின் சுமித்ரா மகாஜன் இங்கே 8 முறை தொடர்ந்து வெற்றிபெற்று சாதனை படைத்துளளார்.

2019 ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், பாஜகவின் ஷங்கர் லால்வானி 5.48 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் பங்கஜ் சங்வியைத் தோற்கடித்தார். 25.13 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட இந்தூரில் இந்த முறையும் பாஜக சார்பில் லால்வானி போட்டியிடுகிறார்.

திடீர் திருப்பமாக, வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளான ஏப்ரல் 29ஆம் தேதி, காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காந்தி பாம் போட்டியில் இருந்து விலகி, பாஜகவில் சேர்ந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார் .

இது காங்கிரசுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. என்ன செய்வதென்று தெரியாத காங்கிரஸ் , வாக்குப்பதிவின் போது நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு தன் பிரச்சாரத்தைச் செய்து வருகிறது.

நோட்டாவுக்கு வாக்களிக்க ஒட்டிய விளம்பரத்தை பாஜக கவுன்சிலர் சந்தியா யாதவ் கிழித்ததைத் தொடந்து அவர் மீது காங்கிரஸ் புகார் கொடுத்துள்ளது. ஆனால் அவரோ , ‘மனசாட்சியுள்ள குடிமகனாக இருக்க வேண்டிய கடமையைத் தாம் நிறைவேற்றியதாகவும், நோட்டாவை விளம்பரப்படுத்தும் போஸ்டரை ஆட்டோ ரிக்ஷாவில் இருந்து அகற்றியதாகவும் தெரிவித்தார் .

தேர்தலில், நோட்டாவுக்கு வாக்களிக்க சொல்வது, ஜனநாயக குற்றம் என்று கூறிய மத்திய பிரதேச பாஜக தலைவர் வி டி சர்மா, ‘25.13 லட்சம் வாக்காளர்கள் உள்ள இந்தூரில் இந்த முறை பாஜக 8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாநகராட்சி மற்றும் சட்டசபை தேர்தல்களில் இந்தூர் வாக்காளர்கள் பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றியை தந்துள்ள நிலையில், ஊழல்வாதிகள் நோட்டாவுக்கு வாக்களியுங்கள் என்று சொல்கிறார்கள் என்றும், நீங்கள் தேச நலனுக்கு ஆதரவாக வாக்களியுங்கள் என்று பாஜகவும் பதிலுக்கு பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, இந்தூரில் காங்கிரஸ் வேட்பாளர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BJP VS NOTA : Interesting in Indore!
ShareTweetSendShare
Previous Post

என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிடக்கூடாது? ஊட்டச்சத்து நிறுவனம் பரிந்துரைகள்!

Next Post

தாய்நாட்டிற்கு பணம்: முதலிடத்தில் இந்தியர்கள்!

Related News

உள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள் – முன்மொழிவை வழங்கியது இந்திய விமானப்படை!

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து – நீர் கசிவு தான் காரணமா?

தொழிலாளர்கள் கைது எதிரொலி : தென்கொரியாவில் ட்ரம்பிற்கு வலுக்கும் எதிர்ப்பு!

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

அமெரிக்காவை அதிரவைத்த சார்லி கிர் கொலை – குற்றவாளி சிக்கியது எப்படி?

மந்த கதியில் மழைநீர் வடிகால் பணி – போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

நீர்நிலைக்கு நடுவே மின் மயான கட்டுமானம் – தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை!

கோகோயின் மனைவிக்கு பாக். உடன் தொடர்பு – அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றச்சாட்டு! 

மணிப்பூரில் 7 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

வீடு, மரங்கள், மின்கம்பங்கள் மீது மீறி ஏறிய தவெக தொண்டர்கள் – மக்கள் கடும் அவதி!

அந்நிய சக்திகளின் கட்டுப்பாட்டில் ராகுல் காந்தி? : வாக்கு திருட்டு விவகாரத்தில் ஆதாரம் வெளியிட்ட பாஜக!

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரம் – அதிகாரி கைது!

பட்டம் இதழ் சார்பில் செஸ் போட்டிகள்!

காங்கோவில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்து – 193 பேர் பலி!

ரஷ்யாவில் கேபிள் கார் விபத்து – 2 பேர் உயிரிழப்பு!

இண்டி  கூட்டணியினர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies