திருப்பதி மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டதையடுத்து பக்தர்கள் எச்சரிக்கையுடன் பயணிக்க தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் வாகனங்கள் பயன்படுத்தும் மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. மலைப்பகுதியில் இருந்து சாலையில் கற்கள் உருண்டு விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த தேவஸ்தான பொறியியல் துறையினர், கற்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்நிலையில் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டுமென தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.