புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது குறித்த கண்காட்சியை
பிரதமர் மோடி பார்வையிட்டார்.
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் புதிய குற்றவியல் சட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் மோடி, நமது நாட்டு மக்களின் லட்சியங்களை நிறைவேற்ற புதிய குற்றவியல் சட்டங்கள் நிச்சயம் வழி வகுக்கும் என்று கூறியுள்ளார்.
அனைத்து சட்டங்களும் ஆய்வு செய்யப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளதாகவும், இதனை அமல்படுத்திய உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.