ஃபேஸ்புக்கில் இருந்து ஒரு கோடி கணக்குகளுக்குப் பூட்டுப் போட்டுள்ளது மெட்டா நிறுவனம். இதற்கான பின்னணி என்ன விரிவாக பார்க்கலாம்.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற பல்வேறு சேவைகளை வழங்கும் மெட்டா நிறுவனம், உலக பயனாளர்களை ஒரே சங்கிலித் தொடரில் ஒருங்கிணைத்து வருகிறது.
நாளுக்கு நாள் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஹேக்கர்கள், போலி கணக்குகள் மெட்டா நிறுவனத்திற்குத் தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன. இவற்றைக் களையும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளைத் தொடங்கியிருக்கிறது மெட்டா.
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என அனைத்து சேவைகளிலும் போலி கணக்குகளையும், BOT மூலம் இயக்கப்படும் கணக்குகளையும் குறிவைத்துப் பூட்டுப் போட்டு வருகிறது.
2025ம் ஆண்டின் முதல் பாதியில் ஃபேஸ்புக்கில் மட்டும் சுமார் ஒரு கோடி போலி கணக்குகளைக் கண்டறிந்து களைந்துள்ளது மெட்டா…மேலும் 5 லட்சம் பயனாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் “ஸ்பாம் கன்டென்ட்” பிரச்சனையைக் கட்டுப்படுத்தவும், ஏஐ தொழில்நுட்பங்கள் மூலம் உருவாக்கப்பட்ட போலியான அர்த்தமற்ற கன்டென்ட்களை களையவும், இத்தகைய நடவடிக்கை அவசியமானதாகக் கருதப்படுகிறது.
மெட்டாவின் இந்த நடவடிக்கை மூலம் உண்மையான கிரியேட்டர்களுக்கு முன்னுரிமை, அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்பலாம்.