காரல் மார்க்ஸை பின்பற்றுபவர்கள் நம் நாட்டின் நாகரீகத்தையும், கலாச்சாரத்தையும் சிதைப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் டாக்டர் எம்.எல்.ராஜா எழுதிய கலியுக கல்வெட்டு எனும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு புத்தகத்தினை வெளியிட்டார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், காரல் மார்க்ஸ் இந்தியாவிற்கு ஏகாதிபத்தியம் தேவை என்று கூறியதை சுட்டிக்காட்டினார். மேலும் சுதந்திரத்திற்கு பின்பும் காரல் மார்க்ஸை பின்பற்றுபவர்கள் நம் நாகரீகத்தையும், கலாச்சாரத்தையும் சிதைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
















