அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் வெடித்து சிதறிய சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், புலனாய்வு விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது. விபத்து நடப்பதற்கு முந்தைய பயணத்தின் போதே, போயிங் 787 விமானத்தில், மின் கோளாறு ஏற்பட்டது விசாரணையில் அம்பலமாகியிருக்கிறது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
கடந்த சில மாதங்களுக்கு முன் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட சென்ற ஏர் இந்தியா விமானம், ஓடுதளத்தில் இருந்து டேக் ஆப் ஆன சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. நாட்டையே உலுக்கிய இந்தக் கோர சம்பவத்தில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆரம்பத்தில் விமானத்தின் COCKPIT VOICE RECORDER-ஐ ஆராய்ந்ததில், நாசவேலையாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது. என்ஜினுக்கு எரிபொருள் செல்லக்கூடிய ஸ்விச் ஏன் ஆப் செய்யப்பட்டிருக்கிறது என விமானி தனது சக விமானியிடம் கேட்ட குரல் COCKPIT VOICE RECORDER-ல் பதிவாகியிருக்க, சதிவேலையாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்தது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விமான விபத்து நிகழ்ந்தது விசாரணையில் உறுதியானது.
இந்நிலையில், போயிங் 787 விமானம், புறப்படுவதற்கு 48 மணி நேரத்தில் 3 மின் கோளாறுகளை சந்தித்திருப்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. ஏர் இந்தியா விமானத்தின் முந்தைய தரையிறக்கத்தின் போதே, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதும், அதன் காரணமாக stabiliser motor பாகங்கள் மாற்றப்பட்டிருப்பதும், விமான பராமரிப்பு புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது.
போயிங் 787 விமானத்தின் stabiliser motor, மற்ற பாகங்களுக்கு மின்சாரத்தை கடத்தவும், தகவலை பரிமாறவும் உதவியாக இருக்கிறது. குறிப்பாக, FUEL TANK தீப்பிடிக்காமல் இருக்க, FIRE INERTOR மூலம் நைட்ரஜன் வாயுவை உற்பத்தி செய்வதில் stabiliser motor முக்கிய பங்கு வகிக்கிறது. ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முந்தைய பயணத்தின் போதே, stabiliser motor-ல் ஏற்பட்ட பிரச்னை சரிசெய்யப்பட்டிருக்கிறது.
இருந்தும் விபத்து நிகழ்ந்ததற்கு காரணம் என்னவென்றால் ? FUEL TANK தீப்பற்றாமல் இருப்பதற்கு உதவும் FIRE INERTOR பாகம் வெளியே கழற்றப்பட்ட 24 மணி நேரத்துக்குள் மீண்டும் பொருத்தப்பட வேண்டுமாம். போயிங் 787 விமானத்தில் 48 மணி நேரமாகியும் FIRE INERTOR பொருத்தப்படாமல் இருந்தது விபத்துக்கு முக்கிய காரணமாகத் தெரிய வந்திருக்கிறது.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள், விமான சேவையை நம்பி, தங்கள் அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வரும் நிலையில், இது போன்ற கோர சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க, விமானங்களில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளை முழுவதுமாகக் களைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
















