நிதி மோசடி வழக்குகள் தொடர்பாக புதிதாக அனில் அம்பானியின் ஆயிரத்து 120 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ், யெஸ் வங்கி மோசடி வழக்குகளில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தின் 7 சொத்துக்கள் உள்ளிட்ட 18 சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. சென்னையில் உள்ள 231 குடியிருப்பு நிலங்கள், 7 பிளாட் வீடுகளும் முடக்கப்பட்டுள்ளது. இதுவரை அனில் அம்பானியின் 10 ஆயிரம் கோடிக்கு அதிகமான சொத்துகளை அமலாக்த்துறை முடக்கி உள்ளது.
















