மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்டது எனவும், அதில் காலம் காலமாக தீபம் ஏற்றி வந்திருப்பதை தமிழக அரசின் தொல்லியல் துறை நூல் உறுதிபடுத்தியுள்ளது. மலை உச்சியில் இருப்பது எல்லைக் கல் என திமுகவினர் மேற்கொண்ட பொய்ப்பிரச்சாரமும் தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள், உத்தர காமிக ஆகமம், உத்தரகாரணாஹமம், திருப்பரங்குன்றம் கோயில், வேற்கோட்டம் உள்ளிட்ட பல்வேறு நூல்களில் இடம்பெற்றுள்ளன. அத்தகைய புத்தகங்களில் யார் தீபம் ஏற்ற வேண்டும் ? எப்போது தீபம் ஏற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களும் அடங்கியுள்ளன.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் உச்சிப் பிள்ளையார் கோயிலில் இருப்பது தான் தீபத்தூண் எனவும், மலை உச்சியில் இருப்பது எல்லைக்கல் தான் எனவும் திட்டமிட்டு பொய் பிரச்சாரங்கள் தமிழகம் முழுவதும் திமுகவினரால் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் பொய் பிரச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக தொல்லியல்துறை 1981ம் ஆண்டு வெளியிட்ட குன்றத்து கோயில்கள் எனும் புத்தகத்தில் ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளன.
திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கே சென்று பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்ட பின் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என தீர்ப்பு வழங்கிய பின்பும் தமிழக அரசும், அதன் காவல்துறையும் அதற்கு அனுமதியை தொடர்ந்து மறுத்து வருகிறது. அதோடு உச்சி பிள்ளையார் கோயிலில் இருப்பது தான் உண்மையான தீபத்தூண் என்றும், மலை உச்சியில் இருப்பது எல்லைக்கல் எனவும் தொடர்ந்து உண்மைக்கு புறம்பான தகவல்கள் தமிழகத்தில் பரப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மலை அடிவாரத்தில் இருந்து மலைக்குச் சென்றால் அங்கு நாயக்கர் காலத்து தீபத்தூண் ஒன்று இருக்கும் எனவும், அதில் புண்ணியவான்கள் அனைவரும் தீபம் ஏற்றலாம் என தொல்லியல்துறையில் இடம்பெற்றிருக்கும் தகவல் தமிழகத்தில் பரவும் பொய்ப்பிரச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் எங்கு ஏற்ற வேண்டும் என்ற சர்ச்சையில் லண்டன் பிரிவியூ கவுன்சில் முதல் உயர்நீதிமன்றம் வரை பல்வேறு தீர்ப்புகளை வழங்கியிருக்கும் நிலையில், திமுகவின் ஆரம்பகட்ட நிர்வாகிகள் தொடங்கி அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான் கனிமொழி வரை மலை உச்சியில் இருப்பது எல்லைக்கல் தான் என பொய்யான தகவலை பரப்பி வந்தனர்.
அவற்றை தவிடுபொடியாக்கும் வகையில் தற்போது கிடைத்திருக்கும் இந்த ஆதாரங்களின் அடிப்படையில், ஒரு சமூக கலாச்சாரத்தின் அடையாளமாக பார்க்கப்பட்ட தீபத்தூணை அழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம்முடைய கடமை என ஆகம நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கார்த்திகை தீபத்திருநாள் அன்று மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும் எனவும், அதற்கு மாறான நாட்களில் தீபம் ஏற்றுவது ஆகமவிதிகளுக்கு எதிரானது என்ற மற்றொரு பிரச்சாரமும் திமுகவினரால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கும் தகுந்த பதிலை ஆகம நிபுணர்கள் கொடுத்துள்ளனர்.
கார்த்திகை முதல் நாளில் இருந்து மாதம் முடியும் வரை எந்தநாளிலும் தீபம் ஏற்றலாம் எனவும், தீபத்தை பக்தர்கள் யார் வேண்டுமானாலும் ஏற்றலாம் எனவும் ஆகம நிபுணர்கள் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளனர்.
இப்படியாக நீதிமன்ற தீர்ப்புகளை அவமதிக்கும் வகையிலும், தமிழக பக்தர்களின் நம்பிக்கையை பொய்யாக்கும் வகையிலும் தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வருவோருக்கு தமிழக அரசின் தொல்லியல் துறை புத்தகமே தகுந்த பதிலாக அமைந்திருக்கிறது.
மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதில் எந்தவித தவறும் இல்லை அதனை உடனடியாக செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மதுரை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்திலும் எழுந்து வருகிறது.
















