உலகிற்கு வழிகாட்டும் நாடாக பாரதம் உயர இளைஞர்கள் பாடுபட வேண்டும் : ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு விழாவில் மோகன் பாகவத் உரை - சிறப்பு கட்டுரை!
Oct 21, 2026, 08:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகிற்கு வழிகாட்டும் நாடாக பாரதம் உயர இளைஞர்கள் பாடுபட வேண்டும் : ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு விழாவில் மோகன் பாகவத் உரை – சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 21, 2026, 07:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, சமூக பிரச்சினைகளை மட்டும் முன்னிறுத்தாமல் அதற்கான தீர்வுகளைக் கண்டறிய வேண்டும் என விரும்புகிறது என அதன் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சமூகத்திற்கு சேவை செய்வதையும், தேச கட்டமைப்பில் ஈடுபடுவதையும் நோக்கமாகக் கொண்டு, நூறு ஆண்டுகளுக்கு முன் 1925ஆம் ஆண்டு விஜயதசமி நாளில் ஆர்எஸ்எஸ் இயக்கம் உதயமானது.

இந்த தொலைநோக்குப் பார்வையைப் பூர்த்தி செய்வதற்காக கடந்த நூறு ஆண்டுகளில் எண்ணிலடங்காத சேவகர்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர். இன்றும் அதே உற்சாகத்துடனும் தேசப் பற்றுடனும் சேவையாற்றி வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவை பயன்படுத்தி தனது செல்வாக்கை விரிவுபடுத்தவும், தனது கட்டமைப்பை வலுப்படுத்தவும் செய்துள்ளது.

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா நிறைவையொட்டி நாக்பூரில் உள்ள ரேஷிம்பாக் மைதானத்தில் நடைபெற்ற விஜயதசமி விழாவில் சிறப்புரையாற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், கடந்த 100 ஆண்டுகளாக சமுதாயத்தில் சுய விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் அடையாளத்தை வலுப்படுத்துவதிலும் ஆர்.எஸ்.எஸ் ஈடுபட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மேற்கத்திய சமூகங்கள் பொருளாதார ரீதியாகச் செழிப்பாக இருந்தாலும், பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றன என்றும், பன்முகத்தன்மையை நிர்வகித்தல், வளர்ச்சியைச் சுற்றுச்சூழலுடன் சமநிலைப்படுத்துதல், அந்நியர்களைத் தங்களில் ஒருவராகக் கருதி நடத்துதல், மற்றும் குடும்ப வாழ்க்கை மற்றும் விழுமியங்களை அடுத்த தலைமுறைக்காகப் பாதுகாத்தல் போன்ற சவால்களுக்கு அவர்களிடம் முறையான தீர்வுகள் இல்லை என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஒரு காலத்தில் குடும்பத்திலுள்ள பெரியவர்கள், பள்ளிப் பாடத்திட்டங்கள் மற்றும் சமூகச் சூழல் ஆகியவற்றின் வாயிலாகப் பரிமாறப்பட்ட விழுமியங்கள் இன்று மறைந்து வருகின்றன என்றும், அதே வேளையில், சமூக ஊடகங்கள் அனைத்து வகையான தகவல்களையும் அனைவரிடமும் கொண்டு சேர்க்கின்றன என்றும் கூறியுள்ளார்.

பல நாடுகளில், இளைஞர்கள் தங்களுக்குக் கிடைக்கும் உள்ளடக்கத்தில் எது சரியானது, எது தவறானது என்று பிரித்தறியாமல் அனைத்தையும் உள்வாங்கிக்கொள்கிறார்கள் என்றும், இதைக் கருத்தில் கொண்டே அந்த நாடுகள் இத்தகைய தளங்களின் மீது கட்டுப்பாடுகளை விதித்துள்ளன என்றும் கூறியுள்ளார்.

விவேகமின்மைதான், உலகம் முழுவதும் உள்ள இளம் தலைமுறையினர் போதைப்பொருட்களுக்கு அடிமையாவதற்குக் காரணமாக அமைவதாக கூறிய மோகன் பகவத், போதைப்பொருள் அடிமைத்தனம் என்பது ஒரு தீவிரமான தேசியப் பிரச்சினை என்று கூறியுள்ளார். எனவே, அரசும் அரசு நிர்வாகமும் சமூகமும் இணைந்து, உரிய நேரத்தில் இப்பிரச்சினையைக் கையாண்டு, அதை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் போதைப் பொருளுக்கு எதிராக நாடு தழுவிய மக்கள் இயக்கத்தை அனைவரையும் ஒன்றிணைத்து உருவாக்குவார்கள் என்றும், மிகச்சிறந்த செழிப்புடன் கூடிய பாரதத்தை உருவாக்குவதும், உலகிற்கு வழிகாட்டும் நாடாக பாரதத்தை உயர்த்துவதும் வருங்கால சந்ததியினரின் பொறுப்பாக அமையும் என்றும், அதற்காக நாட்டின் இளைஞர்கள் முழுமையாகத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

RSS அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சமுதாயத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட ஐந்து முக்கியக் கொள்கைகளான பஞ்ச பரிவர்த்தன் பற்றியும் குறிப்பிட்ட மோகன் பகவத், சுய விழிப்புணர்வு மற்றும் சுதேசி சிந்தனையை பின்பற்றுவது ஆகியவையே முக்கியமானவை என்று வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் அரசியலமைப்புச் சட்ட முகவுரையில் “இந்திய மக்களாகிய நாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம் இந்த விழிப்புணர்வு பிரதிபலிப்பதாக கூறிய அவர், ஆன்மீக பக்தி, சமூக நல்லிணக்கம் மற்றும் மத விழுமியங்களைப் பாதுகாப்பதில் சந்த் ரவிதாஸ், சுவாமி சிரத்தானந்தா மற்றும் சுவாமி லக்ஷ்மணானந்தா சரஸ்வதி ஆகியோரின் பங்களிப்புகளை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

உலக நாடுகளுக்கான உலகளாவிய தர்மத்தை எடுத்துரைக்கும் புனிதமான பொறுப்பை பாரதம் கொண்டுள்ளதாக தெரிவித்த மோகன் பகவத், தன்னுடைய பணிகளின் நூற்றாண்டு விழாவிற்கான திட்டங்களை நிறைவு செய்து, அதன் நோக்கங்களை அடைந்த பிறகு, சங்கம் சமூகத்தில் ஒரு கட்டமைக்கப்பட்ட, கடின உழைப்பாளி மற்றும் வெற்றிபெறக்கூடிய சக்தியை உருவாக்கும் நோக்கில் தொடர்ந்து முன்னேறிச் செல்லும் என்று அறிவித்துள்ளார்.

சங்கத்தின் நற்பெயரின் மீதும், அதன் நோக்கங்களின் நேர்மையின் மீதும் ஐயத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுவதாக கூறிய மோகன் பகவத், சங்கத்தின் பணி, தூய்மையான, தன்னலமற்ற மற்றும் அறம் சார்ந்த அன்பின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

விஜயதசமி விழாவில் மோகன் பகவத் ஆற்றிய உரை, பல்வேறு விவகாரங்கள் குறித்த ஆர்.எஸ்.எஸ் (RSS)-ன் நிலைப்பாட்டை எடுத்துரைக்கிறது. வெறும் சிக்கல்களை மட்டும் சுட்டிக்காட்டாமல், அவற்றுக்கான தீர்வுகளைத் தேட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் விரும்புகிறது. மேலும், களப்பணியின் மூலம் அத்தகைய தீர்வுகளைக் கண்டறிந்து, மற்றவர்கள் பின்பற்றும் வகையில் ஒரு முன்மாதிரியை அது உருவாக்கி வருகிறது.

நூற்றாண்டு காணும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவன நாளை முன்னிட்டு தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நூற்றாண்டு மற்றும் விஜயதசமி விழாவில், சங்கத்தின் தலைவர் மோகன் பகவத்தின் உரை மிகவும் ஊக்கமளிப்பதாக கூறியுள்ளார்.

Tags: mohan baghwatmohan bagawat controversyrss leader mohan bagawatrss chief mohan bagawatmohan bagawat latest speechMohan bhagawatMaharastraNagpurMohan bagawatrss function
Share
Tweet
SendShare
Previous Post

திடீர் இன்ஸ்டா பிரபலங்களை குறி வைக்கும் நிறுவனங்கள் : ஒரே வீடியோவால் பணமழையில் நனையும் வீரமணி – சிறப்பு தொகுப்பு!

Related News

திடீர் இன்ஸ்டா பிரபலங்களை குறி வைக்கும் நிறுவனங்கள் : ஒரே வீடியோவால் பணமழையில் நனையும் வீரமணி – சிறப்பு தொகுப்பு!

பாக். உயரதிகாரிகள் வெளிநாடுகளில் நிரந்தரமாக குடியேற திட்டம் – கவாஜா ஆசிப் குற்றச்சாட்டு!

உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் அதிகாரிகளின் பதவிக்காலம் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு!

3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – காத்திருப்போர் பட்டியலில் ராதிகா ஐபிஎஸ்!

மைசூரு தசரா விழா குறித்த சிறந்த100 ரீல்ஸ்களுக்கு பரிசு – கர்நாடக அரசு அறிவிப்பு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை – சாலைகளில் மழை நீர் தேக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

உலகிற்கு வழிகாட்டும் நாடாக பாரதம் உயர இளைஞர்கள் பாடுபட வேண்டும் : ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு விழாவில் மோகன் பாகவத் உரை – சிறப்பு கட்டுரை!

இறுதிக்கட்டத்தில் இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – டிரம்ப் தகவல்!

காவலர் வீர வணக்க நாள் – காவலர் நினைவு சின்னத்தில் முதல்வர் விஜய் மரியாதை!

சவாலான சூழல்களிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் காவலர்களுக்கு நன்றி – பிரதமர் மோடி

பொள்ளாச்சி – வால்பாறை மலைச்சாலையில் உருண்டு விழுந்த பாறை – போக்குவரத்து பாதிப்பு!

பருவமழையை எதிர்கொள்ள 220 சிறப்பு முகாம்கள் – சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்!

இன்றைய தங்கம் விலை!

சென்னையில் மழை பாதிப்பு பகுதிகளில் அமைச்சர்கள் ஆனந்த், அருண்ராஜ் ஆய்வு!

நாட்டின் கவுரவத்தை கெடுப்பவர்கள் நாட்டின் எதிரிகள் – பிரதமர் மோடி

தேசமே முதன்மை என்ற உணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும் : மோகன் பாகவத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies