மதுரை - Tamil Janam TV

Tag: மதுரை

அலங்காநல்லூர் : குடிநீர் கேட்டு 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்!

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே முறையாகக் குடிநீர் வழங்கக் கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அலங்காநல்லூர் அருகே சின்ன இலந்தைகுளம் கிராமத்தில் மூவாயிரத்திற்கும் ...

மாவட்ட ஆட்சியர் காரை ஜப்தி செய்ய முயன்ற நீதிமன்ற ஊழியர்கள்!

மதுரையில் நீதிமன்ற உத்தரவின்படி மாவட்ட ஆட்சியரின் காரை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தத்தனேரி பகுதியில் உள்ள கருப்பையா என்பவருக்குச் ...

10 ஆம் வகுப்பு மாணவி புகார் : ஆசிரியை, டெய்லர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு!

மதுரையில் ஆண் டெய்லர்கள் மூலம் கட்டாயப்படுத்தி அளவெடுக்க வைத்ததாக 10-ஆம் வகுப்பு மாணவி அளித்த புகாரின் பேரில் தனியார் பள்ளி ஆசிரியை உட்பட 3 பேர் மீது ...

27 விஏஓ-க்கள் பணியிடமாற்றத்தைக் கண்டித்து போராட்டம்!

மதுரையில் 27 விஏஓ-க்களை திடீர் பணியிட மாற்றம் செய்த வருவாய் கோட்டாட்சியரைக் கண்டித்து, கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள 4 கோட்டங்களில் 450-க்கும் மேற்பட்ட கிராம ...

மதுரையில் காவலர் கொலை வழக்கு : தப்பியோட முயன்ற குற்றவாளியை சுட்டு பிடித்த காவல்துறை!

மதுரையில் காவலர் கொலை வழக்கு தொடர்பாக, சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டபோது தப்பியோட முயன்ற குற்றவாளியை காவல்துறை சுட்டுப்பிடித்தனர். மதுரை விமான நிலையம் செல்லும் ...

மதுரையில் கடந்த 5 ஆண்டுகளில் 690 குழந்தை திருமணங்கள் : ஆர்டிஐ தகவல்!

மதுரையில் கடந்த 5 ஆண்டுகளில் 690 குழந்தை திருமணங்கள் நடைபெற்றிருப்பது ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது. மதுரையில் நடைபெற்ற குழந்தை திருமணங்களின் விவரம் குறித்து மோகன் என்பவர்  ஆர்.டி.ஐ ...

மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க விவசாயி புகார்!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக விவசாய குறைதீர் கூட்டத்தில் சேதமடைந்த நெல்லுடன் வந்து ஆட்சியரிடம் கண்ணீர் மல்க விவசாயி ஒருவர் புகார் அளித்துள்ளார். அய்யங்கோட்டை பகுதியில் அரசு ...

திருப்பரங்குன்றம் : தற்கொலைக்கு முயன்ற இளைஞரைக் காப்பாற்றிய காவலர்!

திருப்பரங்குன்றம் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற  இளைஞரைக் காவலர் ஒருவர் சாதுரியமாகச் செயல்பட்டு காப்பாற்றினார். மதுரை மாநகரில் இருந்து திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் செல்லக்கூடிய மேம்பாலத்தில் இளைஞர் ஒருவர் ஹெல்மெட் அணிந்தவாறு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அந்த வழியாக ...

மதுரை விமான நிலையத்தில் அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்!

இலங்கையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்குக் கடத்திவரப்பட்ட அரியவகை உயிரினங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இலங்கையில் இருந்து மதுரை வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த வேலூரைச் சேர்ந்த பயணியின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். ...

அசல் மற்றும் வட்டியைச் செலுத்தியும் கூடுதல் தொகை கேட்கப்படுவதாக தம்பதி புகார்!

மதுரையில் வீட்டுக் கடனை வட்டியுடன் செலுத்தியும், மீண்டும் தவணைத் தொகை செலுத்தத் தனியார் வங்கி அதிகாரிகள் மிரட்டுவதாகப் பாதிக்கப்பட்ட தம்பதியினர் வேதனை தெரிவித்துள்ளனர். மதுரை எஸ்.ஆலங்குளம் பாரதி ...

காரில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பாஜக நிர்வாகி : உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் ஆணையரிடம் மனு

மதுரையில் பாஜக நிர்வாகி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக்கூறி உறவினர்கள் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர். மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் பாஜக ஓ.பி.சி ...

மதுரை : அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண் உயிரிழப்பு!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண் ஊயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராமு என்பவரின் மனைவி தேவி, கர்பப்பையில் ஏற்பட்ட கட்டியை அகற்றுவதற்காக அண்மையில் உசிலம்பட்டி ...

மதுரை : அரசு கட்டட திறப்பு விழா கல்வெட்டில் திமுக நிர்வாகியின் பெயர்!

மதுரையில் அரசு கட்டட திறப்பு விழா கல்வெட்டில் திமுக நிர்வாகியின் பெயர் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. திருமோகூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொது விநியோக கடை மற்றும் ...

டங்ஸ்டன் ஏல உரிமம் ரத்து : பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடிய மக்கள்!

டங்ஸ்டன் உரிம ஏலத்தை மத்திய அரசு செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து மதுரை அரிட்டாபட்டியில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை நாயக்கர்பட்டியில் செயல்படுத்தப்பட இருந்த டங்ஸ்டன் ...

Page 3 of 3 1 2 3