அமெரிக்கா - Tamil Janam TV

Tag: அமெரிக்கா

அமெரிக்கா : ஓட்டுநரில்லா லாரி 1,930 கி.மீ பயணித்து சாதனை!

அமெரிக்காவில் சுமார் இரண்டாயிரம் கிலோ மீட்டர் தூரம்  ஓட்டுநரில்லா லாரியை இயக்கி ஆரோரா இன்னோவேஷன் சாதனை படைத்துள்ளது. டல்லாஸிலிருந்து ஹூஸ்டனுக்கு ஆயிரத்து 930 கிலோ மீட்டர் தூரம் ...

அமெரிக்காவின் புளோரிடா : படகு கவிழ்ந்து விபத்து – 32 பேர் பத்திரமாக மீட்பு!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மியாமி கடற்கரையில் 30க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழுவினர், படகு சவாரி செய்துகொண்டிருந்தனர். அப்போது  அவர்கள் சென்றுகொண்டிருந்த ஆடம்பர லம்போர்கினி ...

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேறினால் 1000 டாலர் – ட்ரம்ப்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வருபவர்கள் நாட்டை விட்டு தாமாக வெளியேறியனால் அவர்களுக்கு ஆயிரம் டாலர் வழங்கப்படும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபராகக் கடந்த ...

அமெரிக்காவின் பேச்சுவார்த்தை அழைப்பை பரிசீலிக்கிறோம் – சீனா

வரி விதிப்பு பேச்சுவார்த்தை குறித்த அமெரிக்காவின் அழைப்பைப் பரிசீலிக்கிறோம் எனச் சீனா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சீன வர்த்தக அமைச்சகம், வரி மற்றும் வர்த்தகப் போர்கள் ...

இந்தியாவிற்கு முழு ஆதரவு – அமெரிக்கா மீண்டும் உறுதி!

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவிற்கு முழு ஆதரவு அளிப்பதாக அமெரிக்கா மீண்டும் உறுதியளித்துள்ளது. பஹெல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான 'தி ரெசிஸ்டெண்ட் ...

அமெரிக்கா : 10 அடி நீளமுள்ள முதலை பிடிபட்டது!

ஃப்ளோரிடாவில் சாலையோரம் படுத்திருந்த சுமார் 10 அடி நீளமுள்ள முதலையை லாவகமாகப் பிடித்தனர். அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாகாணம் ப்ளோரிடா. இதன் தலைநகரம் டல்லஹாசீ. இம்மாநிலத்தின் மத்திய ...

புவேர்ட்டோ ரிக்கோ : குறையாத வெள்ளம் – செய்வதறியாது தவிக்கும் மக்கள்!

அமெரிக்காவுக்குச் சொந்தமான போர்ட்டோ ரிக்கோ தீவில் வெளுத்து வாங்கிய கனமழையால் வெள்ளம் குறையாமல் நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக போர்ட்டோ ரிக்கோவில் கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் ...

ஐபோன்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய திட்டம்?

ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐபோன்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அதன் வருடாந்திர ஐபோன் உற்பத்தியை இரட்டிப்பாக்கி 80 மில்லியனுக்கும் அதிகமான யூனிட்டுகளாக உயர்த்துவதை இலக்காகக் கொண்டுள்ளது. சீனா மீதான டிரம்பின் ஒட்டுமொத்த ...

அமெரிக்கா : கார் மோதி மாணவர்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் பள்ளி வளாகத்தில் அதிவேகமாகச் சென்ற கார் மோதியதில், மாணவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இல்லினாய்ஸ் மாகாணத்தில் சாத்தமில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகள் வீடு திரும்பி கொண்டிருந்த போது, பள்ளி வளாகத்தில் ...

அமெரிக்காவின் தாக்குதல் ஏமனில் கட்டிடங்கள் சேதம்!

அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலால் ஏமனில் உள்ள கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களைக் ...

மீண்டும் கனடா பிரதமராகும் மார்க் கார்னி!

அமெரிக்காவின் வர்த்தகப் போர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற கனடா பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக மார்க் கார்னி பதவியேற்கவுள்ளார். கனடா பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகிய ...

அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் ராணுவ வீரர்கள் தீவிர பயிற்சி!

அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் ராணுவ வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தென்சீனக்கடல் பகுதி முழுமைக்கும் சீனா உரிமை கொண்டாடுகிறது. ஆனால் பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனே உள்ளிட்ட நாடுகளும் அதற்கு உரிமை கோருகின்றன. ...

அமெரிக்கா : காட்டுத்தீயை அணைப்பதற்கு உதவியாக பெய்த மழை!

அமெரிக்காவின் நியூஜெர்சியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயை அணைப்பதற்கு உதவியாக லேசான மழை பெய்தது. கலிபோர்னியா, நியூயார்க், புளோரிடா என பல்வேறு மாகாணங்களில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட கடந்த சில வாரங்களாக அதிகமாக உள்ளது. ...

சவுதிக்கு 100 பில்லியன் டாலர்களுக்கு ஆயுதம் வழங்கும் அமெரிக்கா?

சவுதி அரேபியாவிற்கு 100 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான மதிப்புள்ள ஆயுத தளவாடங்களை வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்நாடு சீன ஆயுதங்களை கொள்முதல் செய்வதை நிறுத்தும் நோக்கில், அமெரிக்க ஆயுத தளவாடங்கள் வழங்கப்படவுள்ளன. ...

அமெரிக்கா : காட்டுத்தீயால் 3,000 ஏக்கர் வனப்பகுதி சேதம்!

அமெரிக்காவின் நியூஜெர்சியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியா, நியூயார்க், புளோரிடா என பல்வேறு மாகாணங்களில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விடக் கடந்த சில வாரங்களாக அதிகமாக உள்ளது. இந்த வாட்டி வதைக்கும் வெயிலால் நியூஜெர்சியில் உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ ...

அமெரிக்காவில் குழந்தை பிறப்பை அதிகரிக்க ஊக்கத்தொகை!

அமெரிக்காவில் குறைந்து வரும் குழந்தை பிறப்பை அதிகரிக்கச் செய்ய அந்நாட்டு அரசு பரிசீலனை செய்து வருகிறது. அந்நாடுகளுக்குச் சவாலை ஏற்படுத்தி உள்ளது. ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து, ...

அமெரிக்காவில் ஓடுபாதையில் சென்ற விமானத்தின் என்ஜினில் திடீரென தீ விபத்து!

அமெரிக்காவில் ஓடுபாதையில் சென்ற விமானத்தின் என்ஜினில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், 300 பயணிகளும் அவசர சறுக்குகள் வழியாகப் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோ விமான நிலையத்தில் இருந்து அட்லாண்டாவிற்கு 300 பயணிகளுடன் டெல்டா விமானம் புறப்படத் தயாராக இருந்தது. ஓடுபாதையில் விமானம் ...

சீன பொருட்கள் மீதான வரி 245%ஆக அதிகரிப்பு : அமெரிக்கா

சீன பொருட்களுக்கு இதுவரை 145 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 245 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போன், செமி கண்டக்டர் எனப்படும் மின்னணு சிப்கள், கணினிகள் ஆகிய உயர் தொழில்நுட்ப ...

அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டோம் – சீனா

அமெரிக்காவுக்குப் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே உள்ளன எனக்கூறியுள்ள சீனா, மிரட்டல்களுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாகப் பேசியுள்ள சீன அரசின் வர்த்தகத்துறை செயலாளர் ஹே யோங்கியான், அமெரிக்கா உடன் மோதலை நாங்கள் விரும்பவில்லை எனவும், ...

ஏமனில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 8 பேர் பலி!

ஏமனில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் 17 பேர் காயமடைந்தனர் எனவும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர். செங்கடலில் செல்லும் வணிக கப்பல்கள் மீது ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தி ...

அமெரிக்கா : கார் மீது விழுந்த ராட்சத மரம் – உயிர் தப்பிய ஓட்டுநர்!

அமெரிக்காவில் கனமழையால் கார் மீது ராட்சத மரம் விழுந்ததில் நல்வாய்ப்பாக காரில் பயணித்தவர் உயிர் தப்பினார். பென்சில்வேனியா, ஓஹியோ உள்ளிட்ட மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் ...

அமெரிக்காவுக்கு எதிராக போராட இந்தியாவுக்கு சீனா அழைப்பு!

வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிராகப் போராட இந்தியாவுக்குச் சீனா அழைப்பு விடுத்துள்ளது. இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அமரிக்கா புதிய வரிகளை விதித்துள்ளது. இதற்கு ...

அமெரிக்காவில் நொடியில் உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்!

அமெரிக்காவில் மின்னல் தாக்குதலில் இருந்து நொடிப்பொழுதில் இரண்டு பேர் உயிர் தப்பினர். அந்நாட்டின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில்  கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு ...

அமெரிக்கா, ஐரோப்பாவில் கோலி சோடாவுக்கு மவுசு அதிகரிப்பு!

இந்தியாவின் பாரம்பரிய பானமான கோலி சோடாவுக்கு அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் வளைகுடா நாடுகளில் மவுசு அதிகரித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் கோலி சோடா ஏராளமான வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அதன் ...

Page 5 of 6 1 4 5 6