கன்னியாகுமரி - Tamil Janam TV

Tag: கன்னியாகுமரி

கன்னியாகுமரி : ஜெபம் செய்வதாக கூறி இளம் பெண்ணிடம் அத்துமீறிய மதபோதகர் கைது!

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே நோய் குணமாகத் தனிமையில் ஜெபம் செய்வதாகக் கூறி இளம்பெண்ணிடம் அத்துமீறிய மதபோதகரை போலீசார் கைது செய்தனர். தக்கலையை சேர்ந்த பெண்ணுக்குத் திருமணமாகி ...

கன்னியாகுமரி : கடலில் மிதந்து வந்த கண்டெய்னரை மீட்கும் பணி தீவிரம்!

கன்னியாகுமரி மாவட்டம், வாணியக்குடி கடல்பகுதியில் மிதக்கும் கண்டெய்னரை மீட்கும் பணியில் குஜராத் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். கொச்சி துறைமுகம் அருகே கடந்த 24ம் தேதி லைபீரியா ...

கன்னியாகுமரி : உருட்டு வண்டியை ஓட்டி போக்குவரத்து நெரிசலை சுட்டிக்காட்டிய யூடியுபர்!

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைச் சுட்டிக்காட்டிய யூடியுபர் ஒருவர் குழந்தைகளுக்கான உருட்டு வண்டியைச் சாலையில் ஓட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். குழித்துறை பாலத்தில் ...

கன்னியாகுமரி : கடை வாசலை மறித்து சுவர் எழுப்பியது குறித்து விசாரணை!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் பேக்கரி கடை வாசலை இரவோடு இரவாகக் கட்டட உரிமையாளர் சுவர் எழுப்பி அடைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தக்கலை பேருந்து நிலையம் அருகே டென்னிஸ் ...

கன்னியாகுமரி : கணபதி சன்னதியில் கொட்டப்பட்டுள்ள மண் – பக்தர்கள் அதிர்ச்சி!

கன்னியாகுமரி மாவட்டம் வேளிமலை பகுதியில் உள்ள குமாரசுவாமி கோயில் குப்பைக் கிடங்குபோல் காட்சியளிப்பதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்தக் கோயிலில், கணபதி சன்னதியின் உள்பிரகாரத்தில் மண் கொட்டப்பட்டுள்ளது. ...

கன்னியாகுமரி : பொதுப்பாதையை அடைத்ததால் தவிக்கும் குடும்பம்!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே  பாதையைத் தனி நபர் ஒருவர் இரவோடு இரவாக கேட் போட்டு அடைத்ததால் மூதாட்டியும் அவரது குடும்பத்தினரும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். குந்நுவிளை பகுதியில்  மூதாட்டி ...

கன்னியாகுமரி : மேகமூட்டத்தால் சூரிய உதயத்தைக் காண முடியாத நிலை – சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!

கன்னியாகுமரியில் மேகமூட்டம் நிலவியதால் சூரிய உதயத்தைக் காண முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். வார இறுதி நாளையொட்டி கன்னியாகுமரி கடற்கரையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். முக்கடல் ...

தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான ஆட்டோ – அதிர்ச்சி சிசிடிவி!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் சிசிடிவி வெளியாகியுள்ளது. ரீத்தாபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு ஆட்டோவில் பயணித்துள்ளார். ஆனக்குழி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, நடுரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் காயமடைந்த இருவருக்கு அரசு ...

 கன்னியாகுமரி : கார் மோதியதில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த நபர் உயிரிழப்பு!

கன்னியாகுமரியில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த கூலித் தொழிலாளி மீது கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சரல்விளை பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியம் என்பவர், முட்டைக்காடு பகுதியில் உள்ள ...

பழங்குடியின மக்களுக்குத் தனி சட்டமன்றத் தொகுதி ஒதுக்க வலியுறுத்தி தீர்மானம்!

கன்னியாகுமரியில் பழங்குடியின பகுதிகளை உள்ளடக்கிய சட்டமன்றத் தொகுதியை உருவாக்கி, பட்டியலின மக்களுக்கு ஒதுக்க வேண்டும் என காணிக்கார்கள் மகா சபை கோரிக்கை விடுத்துள்ளது. பழங்குடியின மக்களின் வன உரிமைகளை வென்றெடுக்கும் மாநாடு காணிக்காரர்கள் மகா சபை ...

வழிமறித்துத் தாக்கிய உறவினர் மீது போலீசார் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை : பாதிக்கப்பட்ட பெண் குற்றச்சாட்டு!

கன்னியாகுமரி மாவட்டம், குமரகோயில் பகுதியில் இருசக்கர வாகனத்தை வழிமறித்துத் தாக்கிய உறவினர் மீது போலீசார் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார். மணிகட்டி பொட்டல் ...

கன்னியாகுமரி : இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்து ரீல்ஸ் வெளியிட்ட 4 இளைஞர்கள் கைது!

கன்னியாகுமரி அருகே இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்து ரீல்ஸ் வெளியிட்ட 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். களியக்காவிளை பகுதியில் நான்கு இளைஞர்கள் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் இருசக்கர வாகனங்களை ஆபத்தான ...

கன்னியாகுமரி : போதைபொருட்களின் கூடாரமாக மாறிய மைதானம் – மக்கள் குற்றச்சாட்டு!

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற அலுவலகம் உள்ள மைதானம் போதைப்பொருட்களின் கூடாரமாக மாறியுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விளவங்கோடு சட்டமன்ற அலுவலகம்  அமைந்திருக்கும் குழித்துறை  விஎல்சி மைதானம், போதைப் ...

இளைஞரின் இறப்பில் சந்தேகம் : உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

கன்னியாகுமரி அருகே இளைஞரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கருங்கல் அடுத்த மாதங்கரைப் பகுதியைச் சேர்ந்த சஜின் என்ற இளைஞர் கூலி வேலை பார்த்து ...

கன்னியாகுமரி : தலைமை ஆசிரியரின் கன்னத்தில் அறைந்த இளம்பெண்!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே இளம் பெண் ஒருவர் அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடைக்காடு பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஜான் கிறிஸ்டோபர் என்பவர் ...

மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை எரித்து கொன்ற மூன்று பேர் கைது!

கன்னியாகுமரி அருகே இளைஞர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை காவல்துறை கைது செய்தனர். லீபுரம் பாட்டுக்குளம் கரையோரத்தில் இரு தினங்களுக்கும் முன்பு பாதி எரிந்த நிலையில், 30 வயது ...

இருசக்கர வாகனம் மீது அதிவேகத்துடன் மோதிய கார் – ஒருவர் படுகாயம்!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே இருசக்கர வாகனம் மீது கார் அதிவேகத்துடன் மோதியதில் ஒருவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். சாமியார்மடம் பகுதியை சேர்ந்த பெஸ்கி, முளகுமூடு பகுதியில் ...

மாயகிருஷ்ணன் சுவாமி கோயிலில் 100-வது ஆண்டு ரோகிணி திருவிழா!

கன்னியாகுமரி அருகே அதங்கோடு மாயகிருஷ்ணன் சுவாமி கோயிலில் 100வது ஆண்டு ரோகிணி விழாவையொட்டி இந்து கடவுள்களின் அலங்கார ரதங்களின் அணிவகுப்பு நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் அதங்கோடு ஆனந்தநகர் ...

மதுபோதையில் யானையின் மீது படுத்து உறங்கிய பாகன் : யானையை மீட்ட வனத்துறையினர்!

கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு பகுதியில் வளர்ப்பு யானையை சாலையில் நிறுத்திய பாகன் அதன் மீது மதுபோதையில் படுத்து உறங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். திற்பரப்பு பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் ...

பெண்ணை ஒருமையில் பேசி வம்பிழுத்த நபரின் வீடியோ வைரல்!

கன்னியாகுமரியில் மகளிருக்கான இலவச பேருந்தில் ஆண்கள் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த பெண்ணை ஒருமையில் பேசிய நபரின் வீடியோ வெளியாகியுள்ளது. தக்கலையில் இருந்து அருமனை நோக்கி சென்றுகொண்டிருந்த ...

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கோயிலில் திரளான பக்தர்கள் வழிபாடு!

கன்னியாகுமரியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கோயிலின் 50-ம் ஆண்டு பொன்விழாவை ஒட்டி, புனர் பிரதிஷ்டையும், மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. பேரை பாரக்காவிளை பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலின் ...

விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்லும் சுற்றுலா படகுகள் நிறுத்தம்!

கன்னியாகுமரியில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்லும் சுற்றுலா படகு சேவை நிறுத்தப்பட்டது. கன்னியாகுமரியின் பல பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இதன்காரணமாக ...

கடுமையான பயிற்சிகளை மேற்கொண்ட பெண்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உலக மகளிர் தினத்தையொட்டி உடற்பயிற்சி கூடத்தில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்ட பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தாமரைக்குட்டிவிளை பகுதியை சேர்ந்த ...

கொடுக்கல் வாங்கல் தகராறில் முன்னாள் கப்பல் ஊழியர் படுகொலை!

கன்னியாகுமரி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் முன்னாள் கப்பல் ஊழியர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கருங்குளத்தான்விளை பகுதியை சேர்ந்தவர் பரமேசுக்கும், பக்கத்தில் வீட்டில் வசிக்கும் ...

Page 2 of 3 1 2 3