Thoothukudi - Tamil Janam TV

Tag: Thoothukudi

எட்டயபுரத்தில் மகாகவி பாரதி இல்லத்தை சீரமைக்க வலியுறுத்தல் – பாஜக ஆர்பாட்டம்!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மகாகவி பாரதி இல்லத்தை சீரமைக்க யாசகம் பெற்று நிதி வழங்கும் நூதன ஆர்ப்பாட்டத்தில் தடையை மீறி ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். எட்டயபுரத்தில் ...

திருச்செந்தூரில் கூலித்தொழிலாளியை கன்னத்தில் அறைந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் – இளைஞர்கள் சாலை மறியல்!

திருச்செந்தூரில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த கூலித் தொழிலாளியை போக்குவரத்து உதவி ஆய்வாளர் கன்னத்தில் அறைந்ததால், ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம், ...

தூத்துக்குடி என்.டி.பி.எல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் 29-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்!

தூத்துக்குடியில் என்.டி.பி.எல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர்ந்து 29-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் ...

தூத்துக்குடியில் குடிநீர் பந்தல் அகற்றம் – மாநகராட்சி அதிகாரிகளுடன் தவெக நிர்வாகிகள் வாக்குவாதம்!

தூத்துக்குடியில் குடிநீர் பந்தலை அகற்றிய அதிகாரிகளுடன் தவெக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அண்ணா பேருந்து நிலையம் அருகே தமிழக வெற்றி கழகம் சார்பில் குடிநீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. ...

இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது மீன்பிடி தடை காலம்!

மீன்கள் இனப்பெருக்கத்திற்கான 61 நாள் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து ...

மாசி திருவிழா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலம்!

மாசி திருவிழாவை ஒட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா ...

புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பற்றாக்குறை இல்லை – சுகாதாரத்துறை

தூத்துக்குடி அருகே கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பற்றாக்குறை இல்லை என சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அரசு ஆரம்ப ...

செவிலியர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணி உயிரிழப்பு – உறவினர்கள் குற்றச்சாட்டு!

தூத்துக்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் சிங்காரகோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் கோபி - ஜாகிரா தம்பதி. ...

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் – பூமி பூஜையுடன் பணிகள் தொடக்கம்!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கியது. திருச்செந்தூர் அடுத்த குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ...

திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை – கூலித் தொழிலாளி கைது!

திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோட்டை சேர்ந்த 26 வயதான ...

தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

இரவு, பகல் என இருவேளையும் மீன் பிடிக்கலாம் என்ற பரிந்துரையை நிறைவேற்றக்கோரி தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி எல்லைக்குள் ...

தூத்துக்குடி : ரூ.5,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது!

தூத்துக்குடி அருகே விவசாயிடம் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார். கீழ தட்டப்பாறையை சேர்ந்த சுதாகர் என்ற விவசாயி, தனது நிலத்தின் ...

கிரிக்கெட் விளையாடிய போது சோகம் – மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு!

தூத்துக்குடியில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய போது மயங்கி விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த ஜான்சன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். ...

பொங்கல் பண்டிகை – உற்சாகமாக கொண்டாடிய வெளிநாட்டினர்!

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே வெளிநாட்டினர்  தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். இங்கிலாந்து ஆஸ்திரேலியா, அயர்லாந்து, சிலி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 21 ...

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அலைமோதும் கூட்டம் – 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள், சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று மார்கழி மாத விசாக நட்சத்திரம் என்பதால், தூத்துக்குடி ...

தூத்துக்குடி அருகே சேதமடைந்த ஆற்றுப்பாலம் – அஞ்சலி செலுத்த சென்ற பாஜகவினர் தடுத்து நிறுத்தம்!

தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் சேதமடைந்த ஆற்றுபாலத்திற்கு பாஜகவினர் நினைவஞ்சலி செலுத்த வந்த நிலையில், போலீசார் அவர்களை தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ...

இயந்திர மோட்டார் பம்புகளை அகற்ற எதிர்ப்பு – தூத்துக்குடி மீனவர்கள் போராட்டம்!

படகுகளில் பொருத்தப்பட்டுள்ள இயந்திர மோட்டார் பம்புகளை அகற்ற வேண்டும் என்ற மீன்வளத்துறையின் உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி 600க்கும் மேற்பட்ட சங்குகுளி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி ...

தூத்துக்குடி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை – 24 மணி நேரத்தில் 591 மி.மீ. மழை பதிவு!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 591 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிக ...

தூத்துக்குடியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு – திரளான ஸ்வயம் சேவகர்கள் பங்கேற்பு!

தூத்துக்குடி: சாயர்புரத்திலிருந்து செபத்தையாபுரம் வரை ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு நடைபெற்றது. விஜயதசமி விழா மற்றும் லோக மாதா அகல்யாபாய் ஹோல்கரின் 300- வது ஜெயந்தி விழாவை ...

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 28 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்!

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 28 கோடி மதிப்பிலான சாரஸ் என்ற போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி கியூ பிரிவு போலீசார் திரேஸ்புரத்தில் ...

கோவில்பட்டியில் 470 கிலோ குட்கா பறிமுதல்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட 470 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். கோவில்பட்டி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ...

தூத்துக்குடி வெள்ள பாதிப்பு – மத்திய குழு இன்று மீண்டும் ஆய்வு!

தூத்துக்குடி மாவட்ட வெள்ள பாதிப்புகளை மத்திய குழு இன்று மீண்டும் ஆய்வு செய்கிறது. குமரிக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த டிசம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில், ...

ஸ்டெர்லைட் வழக்கு – ஜன. 22 -ல் உச்சநீதி மன்றத்தில் விசாரணை!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை கடந்த 1994 -ம் ஆண்டு ஜனவரி 1 -ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாநகரம், குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், ...

தூத்துக்குடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தானம் செய்யுங்கள்! – ஸ்ரீதர் வேம்பு 

தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என ‘சோஹோ’ நிறுவனத்தின் நிறுவனரும், தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான ஸ்ரீதர் வேம்பு  தெரிவித்துள்ளார். கடந்த சில ...

Page 1 of 2 1 2